பக்கம்:வேமனர்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.இயல்-1
இறப்புக்காகப் பிறந்திலர்
நீ சாவதற்காகப் பிறக்கவில்லை
-கீட்ஸ்

ந்தவிதச் சோதனைக்குட்படுத்தினாலும் வேமனர் ஒரு பெருங் கவிஞர் என்பதற்கு ஐயமில்லை; மக்களிடம் கொண்டுள்ள செல்வாக்கைக்கொண்டு மதிப்பிட்டாலும் அவர் முற்கால, இடைக் கால, தற்காலத் தெலுங்குக் கவிஞர்களுக்குள் ஒரு மாபெருங்கவிஞராகவே திகழ்கின்றார். வேறு எவரும், தேன்குரலோடு திகழ்ந்த போத்தனருங்கூட, இவர் அளவுக்குப் பாதிகூடச் செல்வாக்குப் பெறவில்லை. வேமனர் சாதாரண மக்களிடையே ஓர் அரசர் போல் திகழ்கின்றார்; அவர் பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்களிடையே அவர்களறிந்த மொழிகளிலேயே பேசுகின்றார். அவர்களும் அவரிடம் மனந்திறந்தே பேசுகின்றனர். அவர்கள் சில சமயம் அவருடைய கண்டனமொழியின் தாக்குதலுக்கு அஞ்சி விலகலாம். ஆயினும் அவர் நன்னேக்கம் கொண்டவர் என்பதை அறிவார்களாதலின், அவர்கள் அவரை மிக விரும்பி நேசிக்கின்றனர். கவிஞர் என்ற முறையில் அவரை விரும்பும்பொழுதே, அவர்கள் அவரை மெய்யறிவு பெற்றவர் என்றும் ஞானி என்றும் உயர்வாகவே கருதுகின்றனர்; ஒரு முக்கிய செய்தியைக் கணக்கிடுவதற்கோ, ஓர் உண்மையை வற்புறுத்துவதற்கோ அல்லது ஒரு நீதியைக் கோடிட்டுக் காட்டுவதற்கோ அவர் அடிக்கடி மேற்கோளாக எடுத்துக்காட்டப் பெறுகின்றார். இந்திய மொழிகள், இலக்கியங்கள் இவற்றைக் கற்பதில் தன் வாழ்நாள் முழுவதையும் பக்தியுடன் கழித்த ஜி. டி. கிரியர்ஸன் என்ற மேனாட்டு வித்தகர் வேமனரை "இன்று தெலுங்கு எழுத்தாளர்கள் அனைவரிலும் மிக மிகச் செல்வாக்குடையவர் என்றும், அவர் காரணமாகக்குறிக்கப் பெறாத பழமொழியோ அல்லது உயிர்நிலையான கூற்றோ இல்லை" என்பதைக் கண்டுள்ளார்.

வேமனரின் புகழும் செல்வாக்கும் ஆந்திரத்தின் சாதாரண ஆண்மக்கள் பெண்மக்கள் இவர்களின் எல்லைக்குள் மட்டிலும்

1

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/12&oldid=1242402" இருந்து மீள்விக்கப்பட்டது