பக்கம்:வேமனர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நானக் (கி.பி. 1469-1536): சீக்கிய சமயத்தை நிறுவியவர்: ஆகவே, இவர் சீக்கர்களின் குருக்களுள் முதல் குரு ஆகின்றார். இப்பொழுது மேற்குப் பாகிஸ்தானிலுள்ள தால் வண்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து உலகிற்குப் பொதுவான அன்பு, சகோதரத்துவம் ஆகிய நற்செய்தியைப் போதித்தார்.

கெல்லூர்: இதன் பழம் பெயர் விக்கிரம சிங்கபுரம் என்பது. இப்பொழுது இப் பெயர் கொண்ட மாவட்டத்தின் தலை நகரமாகும். குண்டூரில் பிறந்த போதிலும் திக்கனர் தம்முடைய வாழ்நாளின் சிறந்த பகுதியை இந்த நகரில்தான் கழித்தார்.

பகவத் கீதை: கிறித்து சமயத்தில் புதிய ஏற்பாடு பெறும் பெரிய இடத்தை இந்து சமயத்தில் கீதை பெறுகின்றது. மகாபாரதத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனன் என்ற இரண்டு கதை மாந்தர்களிடையே நடைபெற்ற உரையாடல் வடிவத்தில் இது காணப் பேறுகின்றது. இது 650 பாடல்களைக் கொண்டது. சார்லஸ் வில்க்கின்ஸ் (1784) என்பார் இதனை முதன் முதலாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்; தேவகீதம் (The Song of the Celestial) என்ற பெயரில் காணப்பெறும் சர் எட்வின் ஆல்னால்டு என்பாரின் மொழி பெயர்ப்பே இன்று புகழ் பெற்றுத் திகழ்கின்றது. நூற்றுக்கணக்கான உரைகளில் சங்கரரின் உரையே காலத்தால் முற்பட்டது. அண்மைக் காலத்தில் எழுதப்பெற்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துப் புகழ்பெயர் பெற்றவை திலகர், அரவிந்தர், காந்தியடிகள் இவர்களுடைய உரைகளே. உரையாசிரியர்களைப் போலவே உரைகளும் அடிப்படையில் வேறுபட்டவையாகக் காணப் பெறுகின்றன. சிலர் "பகவத் கீதையின் தத்துவம்" என்று குறிப்பிட்ட போதிலும் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் "இதனை ஒரு தத்துவ நூல் என்று சொல்வதை விட பழம் பெரும் சமய நூல் என்று சொல்வதே பொருத்தமானது" என்கின்றர்.

பசவபுராணம்: கி.பி. 12-ம் நூற்றாண்டில் பால்குரிக்கி சோமநாதர் என்பாரால் பாவடிவில் இயற்றப் பெற்ற பசவரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது.

பசவர்: வீர சைவம் என்ற சமத்தை நிறுவியவர். மனித இனத்தைச் சாதி, வகுப்பு என்று மனிதர்களால் செயற்கையாக உண்டாக்கப் பெற்ற எல்லா வேலிகளையும் எதிர்த்து நிறுவப் பெற்ற சமய இயக்கமாகும் இது. கி.பி. பன்ணிரண்டாம்

114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/121&oldid=1256645" இலிருந்து மீள்விக்கப்பட்டது