பக்கம்:வேமனர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூற்றாண்டின் முற்பகுதியில் மைசூர் மாநிலத்தில் (இப்போது கர்நாடக மாநிலம்) பாகெவாடி என்ற சிற்றூரில் பிறந்த பசவர் இந்தியாவின் மிகச் சிறந்த சமய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

பரதர்: நாட்டியம், நாடகம், நாடக அரங்கு இவற்றின் கலைகளைக் கண்டறிந்ததாகப் புராணத்தில் குறிப்பிடப் பெரும் ஒரு முனிவர்.

பவபூதி: காளிதாசருக்குப் பின்னர் சமஸ்கிருதத்தில் ஒரு சிறந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர். உத்தரராம சரிதம், மகாவீர சரிதம், மாலதி மாதவம் என்ற இவருடைய மூன்று நாடகங்களில் உத்தரராம சரிதமே மிகச் சிறந்ததாகும். இவர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். விதர்ப்ப நாட்டில் (மேரார்) பிறந்த இவர் அரச ஆதரவை நாடி உச்சயினி அல்லது காஷ்மீரத்தில் குடியேறினர்.

பாசண்டன்: திருமறைகளின் ஆதிக்கத்தை மறுத்த ஒரு நாத்திகர்!

பிரபந்தம்: நகரங்கள், ஆறுகள், மலைகள், பருவங்கள், காடுகள். ஏரிகள் முதலியவற்றின் வருணனைகளைக் கொண்ட கவிதையாலான நூல். இஃது அரசர்கள், அரசியர்கள், இளவரசர்கள், இளவரசியர்கள் இவர்களின் பால்வாழ்க்கையைப் பற்றி மிக நுணுக்கமாகக் கூறுவது. வேட்டையைப் பற்றியும் போர் பற்றியும் குறிப்பிடுவது. இத்தகைய பல நிபந்தனைகளின் அடிப்படையில் உண்மையிலேயே சிறந்த ஒரு கவிஞரைத் தவிர பிறரால் செய்யப்பெற்ற பிரபந்தம் செயற்கையாகவும் எரிச்சலை ஊட்டுவதாகவும் அமையும்.

பிரபாகர சாஸ்திரி, வேட்டுரி (கி.பி. 1888-1950): இவர் ஒரு சிறந்த ஆய்வாளர்; திறனாய்வாளர். ஓலைச் சுவடிகளினின்றும் பிறவற்றிலிருந்தும் பல நூல்களைச் சேகரித்து, பதிப்பித்து, வெளியிட்டவர். பழைய நூல்கட்கு இவர் எழுதிய முன்னுரைகள் சிறந்த மதிப்புடையவை.

பிரமன்: இந்து திரிமூர்த்திகளில் படைப்புக் கடவுள். செந்நிறத் தோற்றத்தையும் நான்கு தலைகளையும் கொண்டவர். ஏனைய இருவரைப் போலன்றி இவர் மிகக் குறைவான வழிபாட்டினைப் பெறுகின்றார்.

பிரம்மசூத்திரங்கள்: தத்துவ முதுமொழிகள் அடங்கிய நூல். இதனை வியாசர் எழுதியதாகச் சொன்னபோதிலும் டாக்டர் எஸ். என். தாஸ்குப்தர் கருத்துப்படி இது மிகப் பழமையான நூலன்று. இவை (சூத்திரங்கள்) வேறு இந்திய

115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/122&oldid=1256647" இலிருந்து மீள்விக்கப்பட்டது