பக்கம்:வேமனர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தத்துவ முறைகளனைத்தையும் கண்டனம் செய்வதாக அமைத்திருப்பதால், இவை பழங்காலத்தில் எழுதப் பட்டிருக்க முடியாது' என்கின்றார் அவர்; கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் ஒரு காலப் பகுதியில் இவை இயற்றப் பெற்றிருத்தல் கூடும் என்று நம்புகின்றார், ஜேகப்பி என்பார் பிரம்மசூத்திரங்கள் இன்னும் பிற்பட்ட நூல் எனக் கருதுகின்றார். இவர் கி.பி. 200க்கும் 450க்கும் இடைப்பட்ட காலத்ததாகும் என அதனை அறுதியிடுகின்றார். அதன் உரைகளில் சங்கரர், இராமாநுசர், மத்துவர் ஆகியோர் இயற்றிய உரைகளே மிகவும் புகழ் பெற்றவை காலத்தால் மிகப் பிற்பட்டது. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனுடையதாகும். உரைகட்கும் சில உரைகள் உள்ளன.

பிராமணன்: உயர்சாதி வகுப்பினன்; இவனைப் பூசுரன், அதாவது பூமியில் தேவன் என்று வழங்குவதும் உண்டு. இவனைத் "துவிஜன்" (இரு பிறப்பாளன்) என்றும் கூறுவர் (பூணூல்-காண்க).

பிரெளன், சார்லஸ், ஃபிலிப்: (கி.பி. 1798-1884): இந்தியன் சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்) அலுவலர். இவர் தெலுங்கர்களிடமும், தெலுங்கு மொழி, தெலுங்கு இலக்கியத்தின் மீதும் அதிக அன்பு காட்டினார்; அவற்றிற்காக சிறந்த சேவையும் புரிந்தார். தெலுங்கு இலக்கணம், தெலுங்கு-ஆங்கிலம், ஆங்கிலம்-தெலுங்கு அகராதிகள் இவற்றை ஆயத்தம் செய்து வெளியிட்டதுடன், நூற்றுக் கணக்கான ஓலைச் சுவடிப் படிகளையும் சேகரித்தார். முதன் முதலாகப் பழங்கால நூல்களைச் சேகரித்து, ஒப்பு நோக்கிப் பதிப்பித்து, அச்சிட உள்நாட்டுப் புலவர்கட்கு உதவியும் ஊக்கமும் தந்தார். இவரது இடைவிடாத உழைப்பால் வேமனரின் இலக்கியப் புகழுக்கும் அடிப்படைப் பணிகளைப் புரிந்தார்.

பீமன்: (பீமசேனன் எனவும் வழங்கப் பெறுவான்). மகாபாரதத்தின் காவியத் தலைவர்களாகிய பாண்டவ இளவரசர்களில் இரண்டாமவன். பேருருவமும், பேராற்றலும், இராக்கதப் பசியும் கொண்ட இவனை இந்திய ஹெர்க்குவீஸ் எனக் கூறலாம்.

புராணங்கள்: இந்துக்களின் பழைய வரலாறுகளும், கட்டுக்கதைகளும் அடங்கிய தொகுதிகள். வழி வழி வரும் மரபுப்படி பதினெட்டுப் பெரிய புராணங்களும் பதினெட்டு சிறிய புராணங்களும் உள்ளன; ஆனால் இரண்டாவதாகக் குறிப்பிட்ட தொகுதிகள் பெரியனவாக இருப்பதாகக்

116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/123&oldid=1256652" இலிருந்து மீள்விக்கப்பட்டது