பக்கம்:வேமனர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்டறியப் பெற்றுள்ளது. எல்லோரும் அறிந்த இந்து சமயம் பேரளவில் புராணங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. தம்முடைய மொழிப் பெயர்ப்பாகிய விஷ்ணு புராணத்திற்கு எச். வில்சன் எழுதிய நூல்முகம் புராணங்களின் சிறிய நல்ல ஆய்வாகத் திகழ்கின்றது.

பூணூல்: (யஞ்னோபவீதம்'-சமஸ்கிருதம்): இந்துக்களின் நம்பிக்கையின்படி ஒரு பிராமணன் ஒரு பருத்தி நூலை அணியும் பொழுது இரண்டாவது பிறப்பெடுக்கின்றான். இந்தச் சடங்கு அவனுக்கு "இரு-பிறப்பாளன்" என்ற தகுதியை உரிமையாக அளிக்கின்றது.

பூர்வகவி துதி: பழங்காலக் கவிஞர்களைப் போற்றுவதென்பது இதன் பொருள். மரபு வழியாக வரும் எல்லாக் கவிதை நூல்களிலும் இஃது இன்றியமையாததாக இருக்க வேண்டியது. இது சர்வ சாதாரணமாக இருப்பினும், ஒரு சிறந்த செயலை நிறை வேற்றுகிறது; நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும், சிறிதும் வரலாற்று உணர்வைக் காட்டாத ஒரு நாட்டிற்குச் சிறிதளவு வரலாற்றுச் செய்திகளைத் தந்து கொண்டுள்ளது.

போப், டாக்டர் ஜி. யு: தமிழில் ஆழ்ந்த புலமையடைந்த கிறித்தவ சமயத்தைப் பரப்பும் ஓர் அறிஞர். கி.பி. 1886-ல் இலண்டன் மாநகரிலிருந்து குறளின் மொழி பெயர்ப்பை வெளியிட்டார். அதன் பின்னர், மற்றொரு சிறந்த நூலாகிய திருவாசகத்தை மொழி பெயர்த்தார்.

போத்தனர்: (கி.பி. 1400-1475): மகா பாகவதத்தைத் தெலுங்கில் மொழி பெயர்த்த ஒரு பெரிய தெலுங்குக் கவிஞர். பெரும்பாலும் தாமாகவே படித்துணர்ந்த எளிய மனிதர் இவர் அரசின் ஆதரவைப் புறக்கணித்தவர். தம்முடைய இலக்கியத்தைத் தமது வழிபடு கடவுளுக்குக் காணிக்கையாக்கினர். உண்மையும் இனிமையும் இவருடைய கவிதையின் உயர் சிறப்பியல்புகளாகும்.

போஜன்: பல இந்து அரசர்கள் இப்பெயரைத் தாங்கியவர்களாகத் திகழ்ந்தனர். பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த தாராவைச் சேர்ந்த இவர்களுள் ஒருவர் சிருங்காரப் பிரகாசம் என்ற அணி இலக்கணத்தின் ஆசிரியர். இதே துறையில் இன்னொரு நூலும் இவர் எழுதியதாகச் சொல்லப் பெறுகின்றது. (சரஸ்வதி-கந்தப்புராணம்).

மகாத்மா: இதன் சரியான பொருள், பெரிய ஆன்மா என்பது. எல்லோரும் அறியக் கூடிய ஆன்மத்திறம் உள்ளவர் மிக்க

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/124&oldid=1256655" இலிருந்து மீள்விக்கப்பட்டது