பக்கம்:வேமனர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெறுபவன்; கிளி இவனது ஊர்தி, கரும்பு வில்லைக் கொண்டு மலர்களாலான ஐந்து கணைகளை விடுபவன்.

மால: ஆந்திரத்தில் தீண்டத்தகாத வகுப்பினரின் இரு பெரிய தொகுதிகளில் ஒன்று (பறையர் வகுப்பு). இரண்டாவது தொகுதி மாதிகா (சக்கிலியர் வகுப்பு).

முக்கர்ஜி, துர்ஜாத்தி பிரசாத்: (கி.பி. 1894-1961): உலகப் புகழ் பெற்ற ஒரு சிறந்த சமூக இயல் வல்லுநர், இலக்குமண புரி (Lucknow) பல்கலைக் கழகத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். கூரிய அறிவும், தாமாகவே சிந்திக்கும் ஆற்றலும், அரிய உணர்வாற்றலும் கொண்டவர். வங்க மொழியிலும் ஆங்கில மொழியிலும் கைதேர்ந்த எழுத்தாளர்.

மூகசிந்தப்பள்ளி: வேமரின் பிறப்பிடமாகக் கருதப்பெறும் ஒரு சிற்றூர். ஆனால், நெல்லூர் மாவட்டத்தில் இப் பெயர் கொண்ட இரண்டு ஊர்களும், குண்டூர், கடப்பை, சித்தூர் மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஊரும் உள்ளன.

யமன்: நரகத்தின் தலைவன். பச்சை வண்ணத்தவன். சிவந்த ஆடையை அணிந்தவன். கருநிறமுள்ள எருமைக் கடாவை ஊர்தியாகக் கொண்டவன்.

ரெட்டி, டாக்டர் சி. ஆர். (கி.பி. 1880-1951): ஒரு சிறந்த கல்வி நிபுணர். சில சமயம் அரசியலிலும் பங்கு கொள்வதுண்டு. ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் பல்லாண்டுகள் துணை வேந்தராகப் பணியாற்றியவர். ஒரு குறுகிய காலத்தில் மைசூர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் சேவை புரிந்தவர். அவ்வப்போது தோன்றும் நகைச்சுவையும் திறமையாக பதிலிறுக்கக் கூடிய ஆற்றலும் இவரிடம் இயல்பாக இருந்தபடியால் இவர் ஒரு சிறந்த பேச்சாளராகத் திகழ்வதற்குக் காரணமாக இருந்தன. இவர் ஒரு புகழ் பெற்ற திறனாய்வாளரும் கூட.

லால்தாசர்: கபீரின் போதனைகளால் தாக்கம் பெற்றவர். "லால் தாஸர்கள்" என்ற ஒரு பகுதியினரை உண்டாக்கியவர். ஆல்வர் என்பது இவரது பிறப்பிடம். இவருடைய பெற்றோர்கள் மேவாஸ் என்ற ஆதிக்குடியைச் சேர்ந்தவர்கள். இவர் பிறந்த நாள் அறியக் கூடவில்லை; கி.பி. 1648-ல் காலம் சென்றார்.

வங்கூரி சுப்பாராவ்: (கி.பி. 1886-1923): சிறிய உற்பத்தியாளராகவும் வாணிகராகவும் வாழ்க்கையைத் தொடங்கியவர்.

119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/126&oldid=1256657" இலிருந்து மீள்விக்கப்பட்டது