பக்கம்:வேமனர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வியும் கல்வியின் செல்வியுமான நாமகள் (சரசுவதி) வீணையைத் தம் கையில் வைத்திருப்பதாகக் காட்டப் பெறுகின்றது. அங்ஙணமே இவர் மகன் நாரதரும் காட்டப் பெறுகின்றார்.

வீரசைவம்: பசவரால் தோற்றுவிக்கப் பெற்ற எதிர்ப்பார்வநிலையிலுள்ள சைவ சமயம். இதனைத் தழுவியவர்கள் சிவனையே முழு முதற் கடவுளாக வழிபடுகின்றனர்.

விரேசலிங்கம், கந்துக்கூரி (கி.பி. 1848-1919): இக்கால இந்தியாவின் சிறந்த புதல்வர்களில் ஒருவராகிய இவர் சமய, சமூக சீர்திருத்தவாதி. தெலுங்கு இலக்கியத்திற்கு இவர் செய்த சேவை பலதிறப்பட்டது; தெலுங்கில் முதல் புதினம், முதல் நாடகம், முதல் எள்ளல் நூல், முதல் வாழ்க்கை வரலாற்று நூல், முதல் தன்-வரலாற்று நூல்கள், வேறு பல முதல் நூல்கள் எழுதிய பெருமை இவரைச் சாரும். "இந்திய இலக்கியப் படைப்பாளர்கள்" என்ற வரிசையில் சாகித்திய அகாடமி விரேசலிங்கத்தைப்பற்றி ஒரு சிறிய நூலை வெளியிட்டுள்ளது.

வேங்கட்ட ரத்தினம், சர் ரகுபதி: (கி.பி. 1862-1939): பெரும் புகழ் பெற்ற கல்வித்துறை வல்லுநர், சமூக சீர்திருத்தவாதி, சமய ஆசிரியர். வீரேசலிங்கத்தின் காலத்தில் வாழ்ந்த இளைய தலைமுறையினர். தேவதாசிகள், தீண்டத் தகாதவர்கள், சமூகத்தில் தாழ்நிலை அடைந்துள்ள பிறர் இவர்களின் முன்னேற்றத்திற்காகச் சிறப்பாகப் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் திகழ்ந்து பணியாற்றியவர்.

வேதங்கள்: இந்து சமய சாத்திரங்களில் மிகப் பழைமையும் அதிகார முத்திரையும் பெற்றவை வேதங்கள். பக்தியுடையவர்கள் இவை இறைவனால் தரப் பெற்றவை என நம்புகின்றனர். இருக்கு, சாமம், யஜூர், அதர்வம் என நான்கு வேதங்கள் உள்ளன. இருக்கு வேதமே மிகப் பழைமை புடையது.

வைசியர்: இந்துக்களின் சாதிப் பகுப்பில் மூன்றாவது சாதியினர். தெலுங்கில் 'கோமட்டி' எனவும், இந்தியில் 'பணியர்' என்றும் வழங்கப் பெறுபவர்கள். காந்தியடிகள் 'பணியர்' மரபில் வந்தவர்.

ஜோன்ஸ், சர் வில்லியம்: (கி.பி. 1745-94): மிகத் திறமை வாய்ந்த பிரிட்டிஷ் சட்ட வல்லுநர். கி.பி. 1783-ல் கல்கத்தா

121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/128&oldid=1282647" இலிருந்து மீள்விக்கப்பட்டது