பக்கம்:வேமனர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேலூயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப் பெற்றவர். அதற்கு அடுத்த ஆண்டிலேயே வங்காள ஆசியக் கழகத்தை நிறுவுவதில் மிக முக்கிய பங்கினை மேற் கொண்டார். ஐரோப்பிய, ஆசியப் பல மொழிகளில் வல்லுநராகிய இவர், ஒப்பியல் இலக்கணம் என்ற அறிவியல் துறையைத் தொடங்கினர். இந்து சட்டம், முஸ்லீம் சட்டம் என்ற இரண்டு நூல்களைத் தவிர, காளிதாசரின் நாடகங்களில் ஒன்றையும் மொழி பெயர்த்தார். பல்வேறுபட்ட திறன்களை இயல்பாகவே பெற்ற இவ்வறிஞர், குறுகிய காலத்திற்குள்ளேயே மறைந்து விட்டார். இந்திய இலக்கியத் துறைக்கு இஃது ஓர் பேரிழப்பாகும்.

ஸ்மித், வின்சென்ட் ஏ. (கி.பி. 1848-1920): ஓர் இந்திய சிவில் அலுவலர்; கி.பி. 1871-ல் பணியில் சேர்ந்தார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் இந்திய வரலாறு-பண்பாட்டுத் துறையில் மிகக் கடினமாக உழைத்தார். முதன் முதலாக முயன்று எழுதிய இவரது பல நூல்களில் ஒன்று அசோகரது வாழ்க்கை வரலாற்றை மிக விரிவாகக் கூறுவது; மற்றொன்று இந்தியாவின் தொடக்கக் கால வரலாறு (1904), மூன்றாவது இந்தியாவிலும் இலங்கையிலும் கலை வரலாறு. இந்தியாவின் ஆக்ஸ்போர்டு வரலாறு என்ற நூல் 1918-ல் வெளியிடப் பெற்றது; இதுவே இவரது கடைசிப் பெரிய நூலாகும்.

ஹிந்தி: இந்தியாவில் மிக அதிகமான மக்களால் பேசப்படும் மொழி. இந்தியக் குடியரசின் 'ஆட்சி மொழியாக இம் மொழி இந்திய அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப் பெற்றுள்ளது.

ஹேமச்சந்திரர்: (கி.பி. 1088-1172): மிகவும் நன்கு கற்றறிந்த சமணப் பேரறிஞர். இவர் கவிஞராகவும் வரலாற்றறிஞராகவும், அணி இலக்கண ஆசிரியராகவும், வேறுபல துறைகளில் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். சமஸ்கிருதத்திலும் பிராகிருதத்திலும் நன்கு எழுத வல்லவர்.

ஷீரசாகாம்: பாற்கடல். இந்துக்களின் கட்டுக்கதையின்படி, ஏழு கடல்கள் உள்ளன; உப்புநீர்க் கடல், தூயநீர்க் கடல், பாற் கடல், தயிர்க் கடல், கடைந்தெடுத்த வெண்ணெய்க் கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல் என்பவை அவை.

122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/129&oldid=1256661" இலிருந்து மீள்விக்கப்பட்டது