பக்கம்:வேமனர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடங்கியவையல்ல; அண்டைப்புறப் பகுதிகளிலும் அவை நீண்டு பரவிக்கிடந்தன. நீண்ட காலத்திற்கு முன்னதாகவே அவரது பாடல்கள் தமிழிலும் கன்னடத்திலும் மொழி பெயர்க்கப்பெற்று விட்டன. பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்றவர்களில் ஒரு கால் அவர் முதலாவது தெலுங்குக் கவிஞராக இருந்துமிருக்கலாம், அல்லது இல்லாமலுமிருக்கலாம்; ஆனால் வேறு எந்தத் தெலுங்குக் கவிஞரும் இவரைப்போல் மிகப்பல மொழிகளில் பெயர்க்கப்பெற வில்லை என்பது மட்டிலும் உறுதி.

ஆயினும், இந்த நூற்றாண்டின் இருபது ஆண்டுவரையில் வேமனர் தெலுங்கு இலக்கிய உலகத்தினரின் கவனத்திற்குக் கீழேயே இருந்தார் என்று சொல்லலாம். இந்தக்காலப்பகுதிவரை எந்தத் தெலுங்குக் கவிஞரோ, புலவரோ, திறனாய்வாளரோ அல்லது இலக்கிய வரலாற்று அறிஞரோ வேமனரைத் தற்செயலாகவும் வெறுப்பாகவும்கூட எங்கும் குறிப்பிட்டிலர். முதல் இரு தெலுங்கு இலக்கிய வரலாற்றறிஞர்களாகிய குருசாடை சீராம மூர்த்தியும், கந்துக்கூரி வீரேசலிங்கமும் தம்முடைய வரலாற்று நூல்களினின்றும் அவரை ஒதுக்கி வைப்பதே பொருத்தமாகும் என்று கருதியவர்கள். சீராமமூர்த்தியின் நூலைப் போலன்றி வீரேச லிங்கத்தின் முதன்முதலாக 1899-இல் வெளிவந்த 'ஆந்திர கவுல சரித்திரமு' (தெலுங்குக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு) என்னும் நூல் பலவற்றையும் உள்ளடக்கிய நூலாக அமைந்துள்ளது; அதில் சில்லறைக் கவிஞர்கட்கும் புகழ்பெருத கவிஞர்கட்கும் கூடப் பல பக்கங்கள் ஒதுக்கப்பெற்றுள்ளன; ஆனால் வேமனரை விடு படச்செய்துவிட்டது. 1917-இல் வெளிவந்த அதன் இரண்டாவது பதிப்பில் சில சேர்க்கைகளுடன் அதில் காணப்பெறும் கவிஞர்களின் தொகை 220ஆகும்; இப்பதிப்பிலும் வேமனர் இரக்கமற்று ஒதுக்கி விடப்பட்டுள்ளார்.

இன்னும் சரியாகச் சொல்லப்போனால், சீராமமூர்த்திக்கோ அல்லது வீரேசலிங்கத்திற்கோ மிகவும் முன்னதாக 1829-இல் காவலி வேங்கட்டராமசுவாமி என்பார் 'தக்கணத்துக் கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு' என்ற தன் நூலை வெளியிட்டார். அவருடைய சொந்தக் கூற்றுப்படியே "நம்பகமான ஆவணங்களினின்றும் தொகுக்கப்பெற்ற இந்தியத் தீவக்குறையிலடங்கிய (peninsula) பல்வேறு மாநிலங்களில் பெரும்புகழுடன் திகழ்ந்த மேன்மைபொருந்திய முற்கால இக்காலக் கவிஞர்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளைக் கொண்டது" இந்நூலாகும். இந்திய எழுத்தாளர் ஒருவரால் தற்செயலாக ஆங்கிலத்தில் முதன்முதலாக எழுதப்பெற்ற இந்நூல் தெலுங்குக் கவிஞர்களைப்பொறுத்த வரையில் ஒருதலைச்சார்பாகவே உள்ளது. அது மொத்தத்தில் 108

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/13&oldid=1242403" இலிருந்து மீள்விக்கப்பட்டது