ஒழுங்காக வளர்ந்து வரும் வேமனரின் இலக்கியப் புகழ் ஒரு புறமும், இந்தியாவில் மாறிவரும் சமூக சமய நீதி பற்றிய சூழ்நிலை மற்றொறுபுறமும் வேமனரின்மீது ஆய்ந்துகொண்ட மௌன வெறுப்பினைப் போற்றிக் காத்ததற்குத் தெலுங்கு இலக்கிய உயர் மட்டப் புலவர்கட்கு அதிகமான சிரமத்தைத் தந்தன. எல்லாவற்றையும்விட இலக்கியத் திறனய்வு பற்றிய ஒரு புதிய நூலில் நெருக்கி நிரப்பப்பெற்ற வெடிமருந்து இதுகாறும் தாக்குதலுக்கு அசையாதிருந்த அரணில் முதல் பெரிய பள்ளத்தை உண்டாக்கியது. 'கவித்வ தத்துவ விசாரமு' என்ற தலைப்பினையுடைய நூல் முதன்முதலாக 1914-இல் டாக்டர் சி.ஆர். ரெட்டி என்ற பெரியாரால் வெளியிடப்பெற்றது. தன்னுடைய தந்தையாரால் கற்பிக்கப்பெற்றுச் சிறு பருவம் முதற்கொண்டே டாக்டர் சி.ஆர். ரெட்டி பண்டைய தெலுங்கு இலக்கியங்களில் பழக்கப்பட்டவராக இருந்தார். பின்னர் சென்னையிலும் கேம்பிரிட்ஜிலும் அவர் பெற்ற கல்வி மேனாட்டு இலக்கியங்களில் மிக நல்லதாக இருக்கும் பகுதியில் நல்ல பழக்கத்தை உண்டாக்கியது. இயற்கையாகவே கூரிய அறிவும் ஒளிர்விடும் சொல்திறமும் அவரிடம் வாய்த்திருந்தன. மன இயல்பாலும் பயிற்சியாலும் தன்னுடைய நோக்கிலும் போக்கிலும் தற்காலத்திற்குரிய புதுமையைப்பெற்றிருந்தார். தன்னுடைய இலக்கியத் திறனனாய்வு நூலில் தன்னுடைய இயற்கைத்[1]
- ↑ 15