பக்கம்:வேமனர்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. கட்டுக்கதைகளின் மடியில்

"பழைய கட்டுக்கதைகளின் மடியில் உறங்குகிறேன்"

- கீட்ஸ்.

ன் காலத்திலேயே கட்டுக்கதையினுள் அடங்கிய வேமனர் இப்போது கட்டுக்கதைகளின் திரள்களில் அடங்கியுள்ளார். மலையளவுள்ள திரள்களில் அடங்கியுள்ளார் என்று கூடக் கூறலாம். அவர் பல்வேறு வகைகளில் இணையற்றவராகத் திகழ்ந்தார். நடத்தையில், ஆடை அணிவதில் அல்லது முற்றிலும் ஆடையற்றியிருத்தலில், இயல்பான மனப்பாங்கில், தனிக்கோட்பாட்டில், இன்னும் பல வகைகளில் அவருடைய தனித்தன்மை தெளிவாகக் காணப்பட்டது என்று சொல்லலாம். பலர் அவரை ஒரு மகாத்மா என்றும், இன்னும் பலர் அவரை ஒரு வாய்வீச்சுக்காரன் என்றும், பைத்தியக்காரன் என்றும் சொல்லும் அளவுக்கு உண்மையிலேயே அவரது தனித்தன்மை தெளிவாகப் புலனாயிற்று. அத்தகைய ஒரு மனிதர் எக்காலத்திலிருப்பினும் எந்த இடத்திலிருப்பினும் கட்டுக் கதைகள் அவரைச் சுற்றி வேகமாகவும் அதிகமாகவும் திரள்கின்றன. மக்கள் திரளுக்குரிய செய்திப் போக்குவரத்துத் தொடர்பு மிகக்குறைவாகவுள்ள காலத்தில் எதையும் எளிதாக நம்பும் ஒரு சமூகத்தில் வேமனர் வாழ்ந்தார். ஆகவே, அவர் ஒவ்வொரு கட்டுக்கதையின் நடுப்பகுதியாகத் திகழ்ந்தார். அக்கட்டுக்கதைகள் மிகவும் முட்டாள்தனமாகவும், நம்பத்தகாதனவாகவும், இயல்புக்கு மாறானவையாகவும், அருவருப்பாகவும் இருந்தன என்று கூறலாம்.

வேமனரைக் குருவாகவும், கடவுளாகவும் கருதும் சீடர்கட்குக் கட்டுக்கதைகளின் கதாநாயகராகத் திகழும் வேமனர் உண்மையான வேமனராகவே காணப்பெற்றார். இமயமலை எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையாக விளங்கினர்; தெய்வ நிலையிலும் குறைவற்றவராகத் திகழ்ந்தார். வரலாற்று வேமனரைக் காண்பதற்குக் கட்டுக்கதைகளின்புறத்தே அவரைக்கொண்டுவந்து காண்பதற்கு முயன்றால், அச்சீடர்கள் அம்முயற்சியை முறையற்ற அவச் செயலாகவும் கிட்டத்தட்ட தெய்வப் பழிப்பாகவும் கருதுகின்ற

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/24&oldid=1244240" இருந்து மீள்விக்கப்பட்டது