பக்கம்:வேமனர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

னர். அவருடைய சீடர்களைத் தவிர இலட்சக்கணக்கான பிறரும் சிறிதும் மாறாத அதே கருத்தினையே கொண்டுள்ளனர். காரணம், தெலுங்கில் திறனாய்வுடன்கூடிய ஒரு வாழ்க்கை-வரலாற்று நூலுக்கு எதிராகக் கட்டுக்கதைகளில் தொடங்கிக் கட்டுக்கதைகளிலே முடியும். மிக விரிவாகப் புழங்கும் பத்துக்கு மேற்பட்ட வாழ்க்கை-வரலாற்று நூல்கள் நிலவுகின்றன. சி. இராமகிருஷ்ண ராவ் அவர்கள் வேமனரைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஒரே ஒரு வாழ்க்கை வரலாறும் கட்டுக்கதைகளின் கோவையாகவே அமைந்துள்ளது. வேமனரின் வாழ்க்கை-வரலாற்று ஆசிரியர்களுள் மிகத்தொன்மை வாய்ந்தவர் மசூலிப்பட்டினத்தைச் சார்ந்த ஆர். பூர்ணயாச்சார்லு என்பவர். மாவட்டக் காவலர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிந்த இவர் குறைந்த கல்வி கற்றவர்; பண வசதியிலும் குறைந்தவர். ஆனால் வேமனரிடம் கொண்டிருந்த பக்தியோ அளவற்றது. பிரௌன் என்பார் மேற்கொண்ட பணியைத் தொடர்ந்து ஆற்றும் பேரவாவால் தூண்டப்பெற்று, வேமனரின் பனையோலேக் கையெழுத்துப் படிகளுக்காக நாடு முழுவதும் அலேந்துதிரிந்தார்; வாய்மொழியாகப் புழக்கத்திலிருந்த நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதிக்கொண்டார்; கவிஞரின் வரலாற்றுச் செய்திகளாகத் தான் நம்பியவற்றையெல்லாம் எழுதித் தொகுத்துக்கொண்டார். பல்லாண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக 1913-இல் அக்காலத்தில் மிகப்பெரியதென்று கருதப்பெற்ற வேமனரின் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். அத்தொகுப்பில் 4,035 பாடல்கள் அடங்கியிருந்தன. பல கற்பனையான வருணனைகளைக்கொண்ட வேமனரின் வாழ்க்கை வரலாற்றினை எழுதி வெளியிட்டார். அவர் பெருமிதமாகக் கருதிய இந்த வருணனைகள் (வியாசரின் தனிப் பற்றுக்குரிய உவமையில் கூறினால்) வேமனரை "மனிதர்களுள் ஒர் ஏறுபோல்" காட்டின.

வேமனரின் ஏனைய வாழ்க்கை-வரலாறுகளைப்போலவே பூர்ணயாச்சார்லு அவர்கள் எழுதிய "வேமனயோகீந்திர சரித்திரமு" என்ற வாழ்க்கை வரலாறும், நம்முடைய பகுத்தறிவு மனத்தை உறங்கவிட்டுக் கற்பனைக் கதைகளின் அந்தி ஒளிவீசும் உலகில் சென்று உலவினல், கவர்ச்சியால் மயங்கும் அளவுக்கு உற்சாகத்தை ஊட்டும் படியாக அமைந்துள்ளதைக் காண்போம். கலப்பற்ற அந்தக் களிப்பில் ஆழங்கால் படுவதற்காகவே, நாம் இப்பொழுது அந்த உலகில் புகுந்து வேமனரின் சீடர்களும் பக்தர்களும் காணும் வேமனரைக் காண்போம். ஆனால் நாம் தேடிச்செல்லும் நடுநாயகரை நேருக்கு நேர் காண்பதற்கு முன்னர், காலத்தாலும் இடத்தாலும் அகன்று காணப்பெறும் உண்மையெனக் கருதமுடியாதபடி விசித்திரமாகத் திகழும் அந்த மாய உலகில் புகுந்து நெடுந்தொலைவுப் பயணத்தை மேற்

18
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/25&oldid=1244242" இலிருந்து மீள்விக்கப்பட்டது