பக்கம்:வேமனர்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டார் அவர். தான் திரும்பும் வழி தவறிவிடக்கூடுமெனக் கருதி, ஒரு சிறிய பை நிறையக் கடுகுவிதைகளைக் கொண்டு சென்றார். அடர்ந்த புதர்க் காட்டினூடே புகுந்து செல்லுங்கால் வளைந்து வளைந்து பாம்பு போல் செல்லும் வழியெல்லாம் கடுகுவிதைகளை இறைத்துக் கொண்டே சென்றார். பல்வேறு தற்செயல் இடர்களுடன் நீண்ட விடாமுயற்சியுடன் தேடியபிறகு புருடவேதி என்ற ஒரு குளத்தைக் கண்டார். சீசைலத்திற்குத் தான் மேற்கொண்ட திருத்தலப் பயணத்தின் ஒரே தனிநோக்கம் உண்மையிலேயே இக்கண்டுபிடிப்பாகவே இருந்தது. தன் கண்டுபிடிப்பை உறுதிசெய்வதற்காக அவர் ஒர் இரும்புக்கோலை அந்தக் குளத்திலுள்ள பொன் மாற்றுச் சித்து பயக்கும் நீர்மத்தில் தோய்த்தார் என்ன வியப்பு! அந்த இரும்புக்கோல் பொற்கோலாக மாறியது. கரைபுரண்டோடும் களிப்புடன் இரண்டு மட்குடம் நிறைந்து வழியுமாறு அந்த மந்திர நீர்மத்தை நிரப்பிக்கொண்டு கடுகுநெறியின் வழியாகவே விரைந்து திரும்பினர்.

கோமட்டி வேமர் கோயிலையும் அதன் அர்ச்சகர்களையும் தவிர்ப்பான்வேண்டி அப்பாலுள்ள ஒரு சுற்று வழியை மேற் கொண்டுஎல்லைப்புறப்பகுதிவழியாக 'அநுமகிரி'(அநுமக்கொண்ட) என்ற ஒரு சிற்றூரை அடைந்தார். அவர் அவ்வூரை அடைந்த நேரம் பகலவன் மறைந்த ஒரு மணி நேரத்திற்குப் பின்பாகும். அப்பொழுதுதான் அடர்ந்த இருட்படலம் உலகினைச் சூழ்ந்து கொண்டிருந்தது. அன்றிரவு தொண்டி அலியா ரெட்டி என்ற உழவரிடம் பாதுகாப்பிடத்தை நாடினர். (சில பதிப்புகளில் அந்த உழவர் தொண்டி அல்லா- ரெட்டி என்றும் குறிக்கப்பெறுகின்றார்). உழவர் தன் கால்நடைக் கொட்டிலைக் காட்ட, கோமட்டி வேமர் தான் கொணர்ந்த இரண்டு மட்குடங்களையும் சில உழுபடைகளின் பின்னல் மறைத்து வைத்துவிட்டு உணவு பெறுவதற்காகத் தன் சாதி மக்களைத் தேடிச் சென்றார். கோமட்டி வேமர் வெளியில் சென்றிருந்தபொழுது அலியா ரெட்டி என்பவர் தன் மாடுகட்குத் தீனி போடுவதற்காக மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றார். ஏதோ ஒரு பொருள் பொன்போல் பளபளப்பாக ஒளிர்வதைக் கண்டு பெருவியப்படைந்தார். அதன் அருகில் சென்றதும் தற்செயலாகப் புருடவேதியுடன் நேராக மோதியதன் விளைவாக கலப்பைக் கொழுக்களில் ஒன்று பொன்கொழுவாக மாறியிருப்பதைக் கண்ணுற்றார். அலியா ரெட்டியின் சிந்தனை விரைந்து செயற்படவே, அவர் அந்த இரண்டு குடங்களையும் தன் இல்லத்திற்கு மாற்றினர். கொட்டிலிலுள்ள கால்நடைகளை வெளியே செல்லவிட்டு, கொட்டிலின் கூரைக்குத் தீக்கொளுவினார். கூரை கொழுந்து விட்டெரிந்து வானத்தைச் செந்நிறமாக்கவே,

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/27&oldid=1243346" இருந்து மீள்விக்கப்பட்டது