பக்கம்:வேமனர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தப் பரத்தைக்கு 'முடியாது’ என்று சொல்லும் துணிவு வேமனருக்கு இல்லை; இந்த மானக்கேடான வேண்டுகோளுடன் நரசாமாம்பாவை அணுகவும் அவரால் இயலவில்லை. ஆதலால் அவர் அரண்மனையில் இரண்டு நாட்களாக உண்ணவும் பருகவும்மறுத்து வெறுப்புக் காரணமாக பாராமுகமாயிருந்தார். பிடிவாதமான தூண்டுதல்கட்குப்பிறகு அரசி நரசமாம்பா அவருடைய பெருந்துயரின் காரணத்தை அறிந்து, தன்னுடைய மூக்குத்தியைத்தவிர எல்லா அரச அணிகலன்களையும் அவரிடம் கொடுத்தார். உடனே வேமனர் அந்த அணிகலன்களையெல்லாம் அப்பரத்தையிடம் கொண்டு சென்றார், பரத்தையோ அவ்வணிகலன்களிடையே விட்டுப்போன உருப்படி இன்னதென்பதை விரைவில்அறிந்துகொண்டு அதையும் இரந்து பெற்றுவருமாறு அவரைத் திரும்பவும் அனுப்பினாள். சில நிபந்தனைகளின்பேரில் நரசமாம்பா அதனை அவரிடம் கொடுத்தார். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதனைப் பரத்தையிடம் நேராக அளித்தல்கூடாது; ஆனால் அதனை அவளுடைய பள்ளியறையின் வாயிற்படியான கீழ்ச்சட்டத்தில் வைத்து.அதனை அவள் பின்புறமாக வளைந்தவண்ணம் தனது உதடுகளால் கவ்வி எடுக்குமாறு செய்தல் வேண்டும். அங்ஙனம் அவள் கரணம் போட்டெடுக்கும் அருஞ்செயல்களை மேற்கொள்வதற்குமுன்னர் அவள் தன்னை நிர்வாணமாக்கிக்கொள்ளவேண்டும்; அந்நிலையில் வேமனர் விடாமல் அவளைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். அப்பரத்தை மரபினைச் சேர்ந்த பெரும்பாலான மகளிர் நாட்டியப் பாடத்தின் ஒரு பகுதியாகிய இந்த அருஞ்செயலைத் தாம் நாட்டியங்கற்கும் பொழுது கற்றுக்கொண்டிருக்கக்கூடுமாதலால், அப்பரத்தை இதனை எளிதாக ஆற்றுதல்முடியும். ஆனல் நிர்வாண நிலையில் அவளுடைய முறுக்கிய தசையின் காட்சி வேமனரிடம் ஒரு புரட்சிமனப்பான்மையைத் தோற்றுவித்தது; அந்தக் கணத்திலிருந்து என்றும் எல்லா இணைவிழைச்சுத் தொடர்புகளையும் துறந்துவிடும் உறுதியான சூளினை எடுத்துக்கொண்டார்.

வேமனர் அடைந்த அதிர்ச்சி மிக உறைப்பானது. அதனல் அவர் மந்தமான சோர்வுடன் கூடிய உணர்வின்மை நிலையில் ஆழ்ந்துவிட்டார். அதிலிருந்து அவரைக் கிளர்ந்தெழச் செய்வதற்காக, அரசி நரசமாம்பா அரசின் அணிகலன் செய்வோரின் பட்டறையை மேற்பார்வையிடும் பணியில் அமருமாறு பணித்தார். தன் அண்ணியாரிடம் கொண்ட மதிப்பின் காரணமாக வேமனர் விருப்பத்துடன் புதிய கடமைகளை மேற்கொண்டார். இந்நிலையில் ஒருநாள் அபிராமன் என்ற பெயருடைய பொற்கொல்லன் காலந்தாழ்ந்து வருவதைக்கண்டார். வேமனரின் விடாப்பிடியான எச்சரிக்கைகள் யாவும் அவனிடம் பயன்பெறவில்லை. இங்ஙணம் அவன் கட்டுப்பாட்டினை மீறும் காரணத்தை வேமனர் வினவ, தன்னுடைய

25
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/32&oldid=1195693" இலிருந்து மீள்விக்கப்பட்டது