பக்கம்:வேமனர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமய சம்பந்தமான கடமைகள் முக்கியமாக இருப்பதாகவும் தான் காலந்தாழ்ந்து வருவதை எல்லாக் காலத்திற்கும் மன்னிக்கமுடியாவிடினும் இன்னும் சில நாட்களாவது மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். இந்த உறுதியான, ஆயினும் இணக்கவணக்கமான, சாதாரண ஒரு வேலைக்காரனின் கீழ்ப்படிவதற்கான மறுப்பு வேமனரின் விடுப்பார்வத்தைத் தூண்டியது. இதனால் அவர் அதன் காரணத்தை அடியிலிருந்து காண வேண்டுமென்று உறுதிகொண்டார். அடுத்தநாள் காலையில் அவர், அபிராமனை நிழல்போல் பின்தொடர்ந்து சென்று, அவன் பொறுக்கியெடுத்த கனிவகைகளுடனும் காய்ச்சின பாலைக் கொண்டகலத்துடனும் ஒரு குகையில் நுழைவதைக் கண்ணுற்றார். ஒரு மரத்தின் பின்னல் மறைந்து நின்றுகொண்டு அபிராமன் தன்னுடைய படையற் பொருள்களை ஒரு யோகியின் திருவடிகளில் சமர்ப்பிப்பதைக் கண்டார். நீண்ட நேரம் கழித்து அந்த யோகி-இலம்பிகா சிவ யோகி என்பது அவரது திருநாமம்-தம்முடைய திருக்கண்களைத் திறந்து பின்வருமாறு சொன்னர்: "அன்பனே, உன் பக்தியைக் கண்டு நான் அகமகிழ்ந்தேன். நாளை காலையில் நான் இவ்விடத்தை விட்டுப் புறப்படுகின்றேன். அதிகாலை தொடங்குவதற்கு முன்னதாகவே இங்கு வந்து சேர்க, ஆன்மீகத் தீட்சையை உனக்கு வழங்குகின்றேன். மேலும் உன்னிடம் மனித எல்லைக்கு மீறிய ஆற்றல்களையும் தோற்றுமாறு செய்கின்றேன்". இதனைச் செவி மடுத்தவுடன் வேமனர் அரண்மனைக்குத் திரும்பினர். அடுத்த நாள் காலையில் அபிராமனின்றித் தானே அந்த யோகியின் அதுக்கிரகத்தைப் பெறுபவனுக இருக்க வேண்டுமென்று உறுதிகொண்டார்.

அரண்மனைக்குத் திரும்பியதும் வேமனர் அரசி நரசமாம் பாவைத்தேடிச்சென்று அவரை அடைந்தார். அபிராமன் அரசு பட்டறையைவிட்டு அகலாது அன்றிரவு முழுவதும் தங்க வேண்டு மென்றும், அரசிக்கு அவசரத் தேவையாக இருக்கும் அணிகலன் ஒன்றினைச் செய்துமுடிக்கும் வரையில் அவன் பட்டறையை விட்டுப் போகலாகாது என்றும் ஆணை பிறப்பிக்குமாறு அரசரை ஒப்புக்கொள்ளச்செய்ய வேண்டுமென்றும், தம்முடைய உள்நோக்கத்தைப் பற்றி ஆராயக்கூடாது என்றும் அரசியைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அங்ங்ணமே ஆணை பிறப்பிக்கப்பெற்று அபிராமன் அந்த யோகியின் முன்னர் செல்லுவதினின்றும் தடுக்கப் பெற்றன். அபிராமனுக்குப் பதிலாக வேமனர் அந்தநாட் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் யோகியை அடைந்ததும் இலம்பிகா சிவயோகி இங்ஙனம் சொன்னர்: "நல்லது, அந்த எளியவன் தன் வாழ்க்கையின் வாய்ப்பினை இழந்துவிட்டான். அன்பார்ந்த

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/33&oldid=1243352" இலிருந்து மீள்விக்கப்பட்டது