பக்கம்:வேமனர்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ராக உரிமை கொண்டாடுகின்றனர் என்றும், கவிஞரைச் சிறப்பிக்க விரும்புவோரிடமிருந்து அவர்கள் நன்கொடைப் பொருள்களைப் பெற்று வருகின்றனர் என்றும் உள்நாட்டு மரபு வழக்கொன்று கூறுகின்றது.

கேம்பெல் வருந்தியுழைக்கும் ஓர் ஆராய்ச்சியாளர். வேமனர் தமது இறுதி நாட்களைக் காட்டாரப் பள்ளியில் கழித்து அங்கேயே இறந்ததாக மரபு வழியாக அறியக்கிடப்பதால், அவர் அந்தச் சிற்றூருக்குச் சென்றார். அங்கு வேமனரினுடையது என்று கூறப்பெற்ற ஒரு கல்லறையைக் கண்டார்; வேமனரின் நேர்வழி வந்தவர் என்று உரிமை கொண்டாடி அக்கல்லறையைப் பாதுகாத்துவரும் ஒருவரைக் கண்டு பேசினர். வேமனரின் "அச்சம்தரும் மரத்தாலான திருமேனி" யொன்றினைக் கொண்ட கோயிலொன்று அக்கல்லறையின் அருகில் இருப்பதைக் கண்ணுற்றார். "வேமனரே தங்கள் கடவுள்" என்றும், அவர் ஒருவரையே தாம் வழிபடுவதாகவும் உறுதியாகக் கூறிய மக்களைக் கண்டார். காட்டாரப் பள்ளியினின்று திரும்பினவுடன் தான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் அழகிய உரைநடையில் அமைத்தார்.

காம்பெல்லின் கவனத்திற்குக் கொண்டு வராவிடினும் வேமனரைத் தம் முன்னோர் என்று உரிமை கொண்டாடும் காட்டாரப் பள்ளிக் குடும்பத்தின் வசம் 'வேமன சரித்திரமு' என்ற வரலாற்று நூல் ஒன்று உள்ளது. அது மிகவும் சேதமடைந்த நிலையிலுள்ள ஓலைச் சுவடிக் கையெழுத்துப்படியாகும். அதன் ஒரே ஒரு மற்றோரு படி காக்கிநாடாவிலுள்ள ஆந்திர சரசுவதி பரிஷத்தின் தொகுப்பிலுள்ளது. அதனைச் சோதித்துப் பார்க்கையில் இந்த 'வேமன சரித்திரமு' என்ற நூல் மிகப் பிற்காலத்தில், அதாவது கி. பி. 1845-இல், ஒன்று சேர்த்துவைக்கப்பெற்றிருந்தது. 'வேமன யோகிந்திர சரித்திரமு' என்ற நூலில் திரட்டிவைக்கப்பெற்றிருப்பதை விட முட்டாள்தனமானவையும் நம்பத்தகாதவையுமான பல கட்டுக் கதைகள் இந்த நூலில் நிறைந்து கிடக்கின்றன. மேலும் இதில் அடங்கியுள்ள சில வரலாற்றுச் செய்திகளும் துங்கவேமர் என்று வழங்கப்பெறும் மற்றொரு வேமரைப் பற்றியவையாகும். உண்மையிலேயே, துங்கவேமரால் புனையப்பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் அது தன்னகத்தே கொண்டுள்ளது.

வேறு மேற்கத்திய புலவர்கட்குப் பின்னர் எழுதும் கிரியர்ஸன் என்பார் வேமனர் பதினாராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கூறுகின்றன்றார். மற்றையோருடையவற்றைப் போலவே, இவரது கூற்றும் செவியறி தகவல்களையே அடிப்படையாகக் கொண்டதாகும்.

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/40&oldid=1244249" இருந்து மீள்விக்கப்பட்டது