பக்கம்:வேமனர்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொழுது அவர்தம் பெற்றேர்கள் கொண்டவீடு என்னும் இடத்திற்குக் குடியேறினர் என்பது அவர்கள் கொண்டுள்ள கருத்தாகும். இந்த வாதத்தை நீளவிடாமல் செய்யக் கருதும் இரால்ல பள்ளியார் வேமனர் எங்குப் பிறந்தாலும் அவர் தம்முடைய வாழ்நாளின் சிறந்த பகுதியை 'இராயர்சீமை' எனக் கருதப்பெறும் கடப்பை கர்நூல் என்ற மாவட்டங்களிலேயே கழித்தார் என்று கூறுகின்றார்.

அதிக வாதத்திற்கிடமான மற்றொரு முக்கியமான செய்தி அவருடைய சாதியைப் பற்றியதாகும். வேமனர் காப்பு மரபினர் என்கின்றார் இரால்லபள்ளியார். அதற்கு மாறாக வங்கூரியார் வேமனர் ரெட்டி வகுப்பைச் சார்ந்தவர் என்று உறுதிப்படுத்துகின்றார். இருவருமே வேமனரைப் சான்றாளராகக் கொள்ளுகின்றனர். வேமனர் இருவருக்குமே சம அளவில் கடமைப்பட்டவராகின்றார், ஒருதடவை தன்னைக் காப்பு என்பதாகக் கூறிக்கொள்ளுகின்றார், பிறிதொரு தடவையில் தம்மை ரெட்டி என்றே மொழிகின்றார். ஒரு சமயம் காப்பு ஆகவும் பிறிதொரு சமயம் ரெட்டியாகவும் இருப்பதால் வேமனர் ஐயப்பாட்டுக்கு இடமானவராக அமையவில்லை. அண்மைக்காலம் வரையிலும், உண்மையில் இந்த நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரையிலும், காப்பு', 'ரெட்டி’ என்ற சொற்களும் ஒன்றற்கொன்றுகப் பரிமாற்றம் செய்யக் கூடியனவாக இருந்தன. எடுத்துக்காட்டாக, எட்கார் தர்ஸ்டன் என்பாரால் எழுதப்பெற்றுக் கி. பி. 1919-இல் வெளியான "தென்னிந்தியச் சாதிகளும் குலங்களும்" என்ற நூலில் 'ரெட்டி', என்ற பிரிவிற்குத் தனியான பதிவு செய்த குறிப்பு இல்லை; 'காப்பு' என்ற சொல்லுக்குக் கீழே அந்நூல் ரெட்டிகளைப் பற்றிய மரபுப் பண்பு வரலாறு, பழக்கங்கள், வழக்கங்கள் ஆகியவைபற்றிய ஒரு நீண்ட கட்டுரையைக் கொண்டுள்ளது. அது 'காப்பு’, ‘ரெட்டி’ என்ற சொற்களை ஒரு பொருட் பன்மொழியாகப் (Synonym) பயன் படுத்துகின்றது. பிரௌன் தொகுத்த 'தெலுங்கு-ஆங்கில அகராதி' யில் காப்பு' என்ற சொல்லுக்குக் 'குத்தகை எடுத்தவர்', 'உழவர் பயிர்செய்வோர்’, ‘நாட்டுப்புறத்துக்குரியவர்', 'பட்டிக்காட்டார்', 'குடியாள்', “ஆள்', 'குடியிருப்போர்’ என்ற பொருள்கள் காட்டப்பெற்றுள்ளன. இந்த எல்லாப் பொருள்களுள்ளும் 'உழவர்' என்ற பொருளே பொதுவில் அதிகமாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளது. புழக்கத்தில் 'உழவர்' என்ற பொருளில் அதிகமாகப் பயன்படுத்தப்பெறும் 'ரய்த்து’ என்ற சொல் தெலுங்குச் சொல்லே அன்று; அது 'ரையத்' என்ற உருதுச்சொல் சிறிது எழுத்து மாற்றத்துடன் காணப்பெறுவதாகும். மிக அண்மைக்காலத்தில்தான் காப்பு என்ற சொல் தனியான ஒதுங்கிய பொருளில் இல்லாவிடினும், சாதியைக் குறிக்கும் சொற்

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/43&oldid=1244250" இருந்து மீள்விக்கப்பட்டது