நாளடைவில் வீரசைவ சமயம் தன்குறிக்கோள் நெறியைத் தவறவிடுகின்றது. அது வேமனர் காலத்தை அடைகின்றபொழுது மூலமுன்மாதிரியின் நையாண்டிக்கோலங்கொள்ளுகின்றது. சமய உட்பிரிவுகளின் வேறுபாடுகளை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தோல்வியடைந்து, ஏற்கனவே அதிகமாகப் பிளவுகொண்டுள்ள இந்து சமூகத்தில் பிறிதொரு உட்பிரிவினைப்-வீர சைவர்கள் என்ற பிரிவு-புதிதாகச் சேர்த்துக்கொண்டுவிடுகின்றது. உண்மையில், அது இரண்டு பிரிவுகளைச் சேர்த்துக்கொண்டது என்றே சொல்லலாம். காரணம், வீரசைவர்களும் சாதிகளின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாயினர். அரத்தியர்கள் என்போர் பிராமணர்கள்; ஜங்கமர்கள் என்போர் பிராமணரல்லாதவர்கள். மேலும் அது புதியதொரு சடங்குமுறைகளையும் புதியதொரு புரோகித வகுப்பினரையும், ஏராளமான புதிய கட்டுக்கதைகளையும் புராணத் தொகுதிகளையும், புதிதாக உற்பத்தியான மூடநம்பிக்கைத்தொகுதிகளையும் உண்டாக்கியுள்ளது. அந்தக் கோட்பாட்டின் உயிரான உள்தத்துவத்திற்குக் காட்டப்பெறுவதைவிடப் புறம்பான பகுதிகட்கே அதிகக் கவனம் செலுத்தப்பெறுகின்றது. ஒருவர் லிங்கத்தை உடலிடங்கொண்டு மேனியெல்லாம் வெண்ணீற்றைப் பூசிக்கொண்டாலும், ஒருநாளில் வரையறுத்த இடைவேளைகளில் சிவநாமத்தை மனனம் செய்தாலும், தெளிவாகக் குறிப்பிடப் பெற்ற நாட்களில் பட்டினி கிடந்து விரதத்தை மேற்கொண்டு குறிப்பிட்ட திருத்தலங்கட்குச் சிற்சில சமயங்களில் பயணங்களை மேற்கொண்டாலும், நம்பிக்கையுடன் அவர் கடமைகளைப் போதுமான அளவு நிறைவேற்றிவிட்டவராகின்றார். சுருக்கமாகக் கூறினால், சமயம் திட்டமாக அமைந்த கபட நாடகமாகின்றது. இங்ஙனம் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளின் நிலைமையைக்கண்டு வேமனர் பொறுமையற்ற நிலையை அடக்கமுடியாமல் கேட்கின்றார்: "சமயச் சடங்குகளை உண்மையற்ற ஆசார முறையால் மேற்கொள்வதாலும், உண்மையற்றமுறையில் சிவனை வணங்குவதாலும் பயன் என்ன? தூய்மையற்ற பாண்டத்தில் சமைக்கப்பெற்ற உணவினால் யாது பயன்?" விரிந்த நோக்கமுள்ள மனப்பான்மையையும் பிற சமய நம்பிக்கையைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பான்மையையும் வற்புறுத்தி வேண்டும் வேமனர் கூறுகின்றார்: " குண்டா என்று தெலுங்கில் வழங்கினலும் கும்பம்" என்று வடமொழியில் கூறினலும் இரண்டும் ஒரே பொருளைக்குறிக்கின்றன. அங்ஙனமே "கொண்ட என்றும், பருவதம்" என்றும் வழங்கும் சொற்கள் மலையையே காட்டுகின்றன. மேலும் உப்பு என்றாலும் "லவனம்" என்றாலும் அச்சொற்கள் உப்பு என்ற பொருளையே தெரிவிக்கின்றன. வெவ்வேறு பெயர்களைக்கொண்டபோதிலும் இறைவன் என்பவர் ஒருவரேயாவார். தன்னுடன் நெருங்கிப் பழகும்
49