பக்கம்:வேமனர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கைகள் எவ்வளவு இழிவான நிலைக்கு இறங்கியுள்ளன என்பதன் அளவுக்குறியாக அமைகின்றது.

அவர் காலத்திய சமூக-அரசியல் நிலைமைகளும் நன்முறையில் இல்லை. நடுவரசின் மேலாண்மை உரிமை இல்லை; நாடு சிறு சிறு பகுதிகளாகச் சிற்றரசர்களின் ஆட்சியிலிருந்தது. அவர்கள் மிகவும் ஆற்றல் அற்றவர்களாக இருந்தனர். "எந்த முரடனும் பணிவச்சமின்றி ஆட்சிபுரியும் சிற்றரசனை எதிர்த்து நிற்கலாம்" என்பது வேமனரின் கூற்று. ஆட்சியிலுள்ள ஆற்றலற்ற எல்லா மனிதர்களைப்போலவே இந்தச் சிற்றரசர்களும் வெடு வெடுப்புள்ளவர்களாகவும் மனம்போன போக்குடையவர்களாகவும் உள்ளனர். தம்மைச் சுற்றிப் பலவகையான புகழ்பாடும்போலிக் கூட்டங்களைக் கொண்டுள்ளனர். அவர்களுடைய முக்கிய உணவாகிய முகப்புகழ்ச்சியை வாரிக் கட்டிக் கொள்ளுகின்றனர்; ஓய்வானதும் மகிழ்வுடையதுமான வாழ்க்கையை நடத்துகின்றனர்; துயருறுவோர் பழிக்குப்பழி வாங்க இயலாது என்பது உறுதியானல் அவர்கள் மக்களைக் கொடுமை செய்து வருத்துகின்றனர். தெளிவாக அத்தகைய ஒரு சிற்றரசைக் குறிப்பிடும் வேமனர் கூறுகின்றார்: "அவருடைய திருக்குமாரர் ஒரு போக்கிரி, அவருடைய நண்பர் ஒரு கோள்சொல்லி, அவர் அறிவற்றவர், அவருடைய அமைச்சரோ ஒழுக்கமற்றவர். உண்மையாகவே, பெரிய குரங்கு வகைக் கூட்டத்துடன் இருக்கும்பொழுது சாதாரணக் குரங்கு ஒருபொழுதும் மகிழ்ச்சியுடன் இருத்தல் முடியாது.” பிறிதொரு பாடலில் அவர் கூறுவது இது: "அதிகாரத்தில் உள்ள மூடன் ஒருவன் தகுதி உள்ள அனைவரையும் வேலையிலிருந்து நீக்கிவிடுகின்றான் உண்மையாகவே செருப்பைக் கடிக்க விரும்பும் நாய் கரும்பின் சுவையை எங்ஙனம் அறியமுடியும்?" இறுதியாக அவர் "உயிருக்கு ஊறு விளைவிக்கும் நாகத்துடன் கொள்ளும் உறவைவிடக் கீழானதால், சிற்றரசரை நம்பவும் வேண்டாம்; அவருக்குப் பணி செய்யவும்வேண்டாம்" என்று நம்மை எச்சரிக்கின்றார்.

இத்தகைய மனவுறுதியில்லாத கொடிய சிற்றரசர்களின் கொடுங்கோலாட்சியில் உயிருக்கோ சொத்துக்கோ பாதுகாப்பு இல்லை. கொள்ளைக்காரர்கள் நாட்டுப்புறங்களைச் சூறையாடுகின்றனர்; அவர்கள் தண்டிக்கப்பெறுவது இல்லை. அவர்களைப்பார்த்து வேமனர் பேசுகின்றர்: "நீங்கள் மக்களை கொன்றும் உறுப்புக் குறைச்செய்தும் வருகின்றீர்கள், சிற்றூர்களைக் கொள்ளையடிக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் தங்குதடையற்றுச் செல்லலாம். ஆனால் யமனுடைய சீற்றத்தினின்றும் தப்பமுடியுமா?’’ இறுதி தீர்ப்பினைப்பற்றிய எச்சரிக்கைகள் கடின சித்தமுடைய குற்றவாளிகளைக் கொள்ளையடிக்கும் தொழிலினின்றும் அச்சத்தால் பின்

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/59&oldid=1250777" இலிருந்து மீள்விக்கப்பட்டது