பக்கம்:வேமனர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்லை; அவற்றை உணராதவர்கட்கு அவை உண்மையற்றவை, புரியாதவை; குறியீடுகளின் துணையின்றி எல்லா மறை மெய்ம்மையாளர்களும், அவர்கள் இந்துக்களாயினும், கிறித்தவர்களாயினும், சூஃபிகளாயினும், ஒரு மறைமெய்ம்மை சார்ந்த அநுபவத்தின் சரியான இயல்பினைப் பிறருக்கு எடுத்துரைப்பது தமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்பதைக் காண்பார்கள். பிற மறைமெய்ம்மையாளர்களைப் போலவே, வேமனரும் தமக்கேயுரிய குறியீடுகளைக் கையாளுகின்றார், "உறக்கத்துக்கு அப்பால் உறக்கம்", "அறிவுக்கு மேல் அறிவு", "பரந்த வெளியினுள் பரந்தவெளி", "நோக்கினுள் நோக்கு", "திரைக்குப் பின்னால் ஒளி", "உடலினுள் ஆன்மா", "ஆன்மாவினுள் உடல்"- அவர் கையாளும் பல குறியீடுகளில் இவை சிலவாகும். பொதுவாகக் கருதுமிடத்து வேமனரின் மறை மெய்ம்மை சார்ந்த பாடல்கள் தெளிவற்றிருப்பினும், மீமெய்ம்மையியல் சார்ந்த (Sur realistic) கவிதையை விடவும், கருத்தியற் கலையை விடவும் அவை அதிகத் தெளிவற்றவை அல்ல. சில விஷயங்களைக் குறிப்பினால் தெரிவிக்கலாமேயன்றி விளக்கம் செய்தல் இயலாது என்பதை ஒப்புக்கொள்ளாமலேயே வேமனரின் சீடர்களில் சிலர் விளக்கமுடியாதனவற்றை விளக்குவதில் முயன்று தம்மை ஏளனத்திற்குள்ளாக்கிக் கொள்ளுகின்றனர்.

தன்னுடைய கவிதைக்கு வேமனரால் தேர்ந்தெடுக்கப்பெற்ற யாப்பு 'ஆட்டவெலதி' என்பதாகும். அஃது அவரால் புனையப் பெறவில்லை; அஃது மக்களிடையே வழங்கிவந்த மிகப்பழைய யாப்பாகும். அதன் சொல்லுக்குச் சொல் சரியான பொருள் "நாட்டியமாடும் ஆரணங்கு" என்பதாகும். நன்னயரிலிருந்து கீழ் நோக்கி வந்தால், நூற்றுக்கணக்கான கவிஞர்கள் அதனைப் பயன்படுத்தியுள்ளனர்; ஆனால் வேமனரைத் தவிர ஒருவராலும் அதனை வேமனரைப்போல் "நாட்டியமாடச்" செய்ய இயலவில்லை. காளிதாசருக்கு 'மந்தா கிராந்தா' என்ற யாப்பு அமைவதுபோலவும், பவபூதிக்கு 'சிகரிணி' அமைவது போலவும் திக்கனாவுக்குக் 'கந்தம்' அமைவதுபோலவும், 'சீசம்' சிநாதருக்கு அமைவது போலவும் வேமனருக்கு 'ஆட்டவெலதி' அமைகின்றது. ஆங்கில இலக்கியத்தினின்றும் ஒரு போகான இரண்டு எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடலாம். செகப்பிரியர் எதுகையில்லாத செய்யுட்களையும் (செந்தொடைப் பா), போப் வீரகாவியம் சார்ந்த ஈரடிப்பாவையும் கையாண்டதைப் போலவே வேமனரும் அதே செப்பிடு வித்தையை 'ஆட்டவெலதியிடம்' கையாண்டார். வீரகாவியம் சார்ந்த ஈரடிப் பாவைப்பற்றிப் பேசும் லிட்டன் ஸ்ட்ரேச்சி என்பார். "அது போப்பின் கையில் அதன் இயல்பில் முடிவான நிறைவினை-அதன் இறுதியான சிறப்பினை-அதன் தலைசிறந்த நிறைவேற்றத்தை

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/64&oldid=1250792" இலிருந்து மீள்விக்கப்பட்டது