கையாண்டுள்ளார் என்று நிலவும் பொதுக்கருத்தினை டாக்டர் கிருஷ்ணராவ் அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது தெளிவு. ஆனால் ஒரு புள்ளிவிவரப் பகுப்பாய்வால் பதினைந்து விழுக்காடு கவிதைகள் மட்டிலும்தான் ஒப்புமையைத் தாங்கிக்கொண்டுள்ளன என்று தெரியவருகின்றது. ஆனால் இவற்றிலும் சொல்லமைப்பில் சிறு மாற்றத்துடன் அல்லது மாற்றமேயின்றிக் கூறியது கூறலே அமைந்துள்ளது. மேலும், வேமனருக்கே உரிய வெறுப்பினை விளைவிக்கும் நாயும் கழுதையும் ஒரு சில ஒப்புமைகளில் சிறப்பாகத் தோன்றுகின்றன. ஆனால் வேமனர் எப்பொழுதுமே இந்த ஒப்புமைகளைக் கையாளுகின்றார் என்ற எண்ணத்தைத் தரும் அளவுக்கு மிகப்பொருத்தமாகவும் ஒளிதுலங்கும் முறையிலும் சில சமயங்களில் மகிழ்ச்சியுடன் வியப்பூட்டும் வகையிலும் அவர் அவற்றைக் கையாளுகின்றார். அவருடைய பாடற்கோலத்தின் அமைப்பு பற்றி இன்னும் ஒரு குறிப்பினை ஈண்டுக் காட்டலாம். விவாதமுறையில் வேமனர் மிகத் திறமையுள்ளவர் என்பது உண்மையே. ஆனால் சிலர் கூறுவதுபோல் கிட்டத்தட்ட தனது எல்லாப் பாடல்களிலுமே முதலடியில் கருத்தைக் கூறுதலும் இரண்டாவது அடியில் முரணை அமைத்தலும் மூன்றாவது அடியில் இணைப்பைக் காட்டலும் அமைந்துள்ளன என்று கருத்தினைத் தெரிவிப்பது சரியன்று. உண்மையில் அவருடைய பாடல்களில் நூற்றுக்கு மேற்படாதவைகளில்தான் குறிப்பிட்ட இந்தக்கோலம் காணப்பெறுகின்றது.
மொழி பெயர்ப்பில் கவிதைகள் அழகும் வேகமும் இழந்தாலும், வேமனரின் மூன்றாவது வரிகளில் சிலவற்றை-வினா வடிவில் அமைந்துள்ளவற்றை-இவ்விடத்தில் எடுத்துக்கூறலாம். விளக்கினை ஏற்றாத வரையில் இருட்டினை எங்ஙனம் ஒட்டமுடியும்? ஒரு நாயின் வாலில் தொங்கிக்கொண்டு கோதாவரி ஆற்றினைக் கடக்க முடியுமா? குரங்கால் யானையை விடுவித்தல் கூடுமா? பாலினால் கழுவிக் கரியை வெண்மையாக்க முடியுமா? ஏரி வற்றிவிடின் கொக்குகள் அதனைத் துறந்துவிடாவா? சிறுவர் தாங்கினல் தீவட்டி சிறிதாவது குறைந்த ஒளியுடன் பிரகாசிக்குமா? ஓநாயின் சாவுக்கு ஆடு ஏன் பரிந்து புலம்பவேண்டும்? நாய்வாலை நிமிர்த்த முடியுமா? பொம்மைகட்கு நீதி புகட்டமுடியுமா? நறுமணப்பொருள்களின் சுமையைத் தாங்கி வருவதனால் கழுதை சற்று உயர்ந்ததாகுமா? மேலிருந்து கீழ் நோக்கி சுவர் கட்டமுடியுமா? எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் ஒரு பந்தைத் தூக்கி எறிந்தால், அது அங்கே தங்கி விடுமா? தங்க மோதிரம் வெண்கல மோதிரத்தைப்போல் உரத்த ஒலியினை உண்டாக்குமா? ஒரு பெரிய மலையும் உருக்காட்டும் ஆடியினுள் சிறியதாகத் தோன்றவில்லையா? கோதாவரி நதியில் மூழ்கி நாய் சிங்கமாக முடியுமா? சேற்றில் புரண்டு களிக்கும் பன்றி
59