பன்னீரின் பெருமையை உணர முடியுமா? எருமைக்கடா எவ்வளவு பெரிதாக இருப்பினும் அஃது ஒரு யானைக்குச் சமமாக முடியுமா? ஆணின் வேலையைச் செய்வதால் பெண் ஆணாக முடியுமா? உணவைப் பரிமாறும் கரண்டி அதன் சுவையை எங்ஙனம் அறிய முடியும்? ஆலமரம் பெரிதாக இருந்தபோதிலும் அதன் விதை மிகச் சிறியதாக இருக்கவில்லையா? தலைகள் வழுவழுப்பாகச் சிரைக்கப் பெற்றிருந்தாலும் சிந்தனைகள் தூய்மையானவையாக முடியுமா? வேமனவின் பாடல்களில் மூன்றாவது வரியில் அமையும் இவையும் இவை போன்ற பலவும் தெலுங்கில் பெருவழக்காகத் திகழும் பழ மொழிகளாகும்.
வேம்னரின் பிற கொடைகள் ஒருபுறம்இருக்க, அவரிடம் நகைச்சுவை உணர்வு உரமாக அமைந்திருந்தது. "என்னிடம் நகைச்சுவை உணர்வு மட்டிலும் அமைந்திராவிடில் நீண்ட நாட்களுக்கு முன்னரே தற்கொலை புரிந்து கொண்டிருந்திருப்பேன்" என்று காந்தியடிகள் ஒருமுறை கூறினர். இந்தச் சொற்கள் வேமனரிடமிருந்தும் வந்திருத்தல்கூடும். வேமனரும் அத்தகைய உயர் நோக்கமுடையவர்; தான் ஆதரித்த உயர்நோக்கங்களில் தன்னை மிகவும் உள்ளடக்கிக் கொண்டிருந்தவர்; ஆகவே அவரிடம் வேடிக்கையாகப் பேசவும் சிரிக்கவுமான அறிவுத்திறன் அமைந்திராவிடில் அவரும் தற்கொலை புரிந்துகொண்டிருப்பார். இந்தத் திறனும் அவருடைய கவிதைக்குத் தன் சொந்த வேகத்தை அளிக்கத்தான் செய்தது. கஞ்சப் பிரபுக்கள் அவருடைய நகைச்சுவைக்குத் தனிப்பட்ட இலக்காகின்றனர். அவர்களைப் பற்றி அவர் கூறுகின்றார், கஞ்சப் பிரபு ஒருவரை ஒழித்துக்கட்ட விரும்பினால் அவருக்கு நஞ்சூட்ட வேண்டியதில்லை; அல்லது வேறு தீவிரமான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஒரு பெரிய நன்கொடை வழங்குமாறு கேளுங்கள். இந்த அதிர்ச்சியே உடனே அவரைக்கொன்று விடும். வறட்டுப் பசுவினிடம் பால் கறக்க விரும்பினால், உங்கட்குக் கிடைப்பதெல்லாம் விலாவெலும்புகளில் உதைதான்; ஒரு கஞ்சப் பிரபுவினிடமும் இதைவிட அதிகமாக ஒன்றும் நிகழப்போவதில்லை. "கஞ்சப்பிரபுவின் குடும்பத்தில் நிகழும் சாவு மிக உரக்கமும் நெடு நேரமும் அழச்செய்கின்றது; காரணம், இழவு வினைக்குரியசெலவுகள் பற்றிய எண்ணத்தினால் அவருடைய இதயம் கீரப்படும்." உண்மையான ஆன்மீக அறிவுரைஞர் தனிமையான இடங்களில் தான் காணப்பெறுவர் என்ற கருத்தினால் தங்களை ஏமாற்றிக் கொள்பவர்களைக் கேலிசெய்யும் கவிஞர் கூறுகின்றார்: "வானுலகத்திற்கு வழிகாட்டும் ஆசாரியர் ஒருவரைக் காணலாம் என்று நம்பிக்கையால் சொக்கியவண்ணம் ஓர் இருளடைந்த குகையினுள் புகுவீர்களாயின், நீங்கள் விரும்பும் நேரத்தைவிட மிக விரை
60