இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'மொழி பெயர்ப்பு' என்பது ஒரு கலை, இலக்கியப் படைப்புகளில் மொழி பெயர்ப்பு நூலும் ஒருவகை. மொழி பெயர்ப்பினைத் தொல்காப்பியர் 'அதர்ப்பட யாத்தல்' என்று குறிப்பிடுவர். மொழி பெயர்ப்பு நூலைப் படிப்போருக்கு 'இஃது ஒரு மொழி பெயர்ப்பு' என்று தோன்றாவண்ணம் முதல்நூல் போலவே சரளமான தீந்தமிழ் நடையில் மொழிபெயர்ப்பு அமைதல் வேண்டும். பல புதிய கருத்துகள் தமிழ் மொழியினை அடைவதற்கு 'மொழி பெயர்ப்பு—சேது' ஒரு வழியாகும்.
இந்த நூலை எழுதி வெளியிடுவதற்கு இசைவு தந்த திருவேங்கடவன் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினருக்கும், சிறப்பாகப் பல்கலைக் கழகத்தை இயக்கித் திறம்படக் கண்காணித்து வரும் அதன் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் கே. சச்சிதானந்த மூர்த்தி அவர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றி என்றும் உரியது.
—ந. சுப்பு ரெட்டியார்.