பக்கம்:வேமனர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருத்துகளைத் தெரிவிக்கும் எல்லாப் பாடல்களும் இடைச்செருகலானவை என்று வீசியெறிப் பெற்றும் திருத்தத்தை மேற்கொண்டால், எஞ்சியவை யாவும் எல்லா வகையிலும் இரண்டாயிரத்திற்கு மேற்படா. இவற்றை ஒன்முக இணைப்பதில் வேமனரை மேம்படச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தப்புவழியான முயற்சியை மேற்கொள்ளலாகாது. அவர் மக்களிடம் மக்கள் மொழியிலேயே பேசினர். அதனால் அதன் பேச்சுவகை வனப்புக் கூறு முழுவதும் காப்பாற்றப்பெறுதல் வேண்டும். இலக்கண, யாப்பு விதிகளேவிடச் சுருக்கத்திலும் பயனுள்ள வேகத்திலுமே அவர் அக்கறைகொண்டார்; அந்த விதிகள் புறக்கணிக்கப்பெறல் வேண்டும் என்று அவர் கருதினால் சிறிதும் தயக்கமின்றி அவ்வாறே செய்தார். இங்கனம் அவருடைய விதிமீறல்கள் யாவும் ஆழ்ந்து ஆராய்ந்து செய்யப்பெற்றவையாதலின், அவர் பாடல்களைத் திருத்துவதில் ஒன்றும் மேற்கொள்ளப்பெறலாகாது. அவரது வானாளில் ஒரு நிலையில் யாரோ ஒரு பிடிவாதக்காரரால் இலக்கண விதிகள் பற்றி அவர் குறைகூறப் பெற்றிருக்கலாம்; இல்லாவிடில், அவர் எதிர்த்துக்கூறியிருக்கமாட்டார். அந்த இழிந்த பாதகன் ஓர் உயர்தரக் கவிஞர்போல் கவிதைகள் இயற்ற முடியாது; எனினும் குறைகாணத் துணிகின்றான். பானைகளின் குவியல் ஒரு நாயால் உருட்டித் தள்ளப்பெறலாம்; ஆனால் அதனால் குவியல் அமைக்க முடியுமா? ஆகவே, இப்பொழுது தேவைப்படுவது வேமனரை இலக்கண விதிகள் யாப்பு விதிகள் ஆகியவற்றாலான ஒடுக்கமான உறையினுள் அடக்குவதல்ல; பதிப்பிப்பதில் நவீன அறிவியல் முறைகளின்படி அவருடைய பாடல்களின் ஒரு திட்டமான பதிப்பொன்றினைத் தயாரிப்பதே உடன் தேவைப்படுவது.

வேமனரின் கையெழுத்துப் படிகள் இழிநிலை வரம்பினைத் தொடும் அளவுக்குச் சில பாடல்களைக் கொண்டுள்ளன. அவசியம் நேரிடுங்கால் அவர் கூர்மையாகவும், காரசாரமாகவும், கடிப்புடையதாகவும் இருக்க நேரிடுகின்றது. ஆனால் ஒழுக்கக்கேட்டிற்குச் சலுகை கொடுக்கின்றார் என்ற குற்றத்திற்கு ஆளாக இருந்திருக்க முடியாது. அதில் கும்மாளத்துடன் கூத்தாடுவோரை அவர் தெளிவாகவே கடிகின்றார். அவர்களை நாகரிகமற்றவர்கள் என்கின்றார்: சேற்றில் புரளும் பன்றிகள் எனக் குறிப்பிடுகின்றார். ஆகவே, அவருடைய திட்டமான மதிப்பு ஒழுக்கக்கேடு இன்றி இருக்குமாறு அமைதல் வேண்டும்.

வேமனருக்கு நேர்மையாக இருக்க வேண்டுமாயின், இரசவாதத்தைப் பற்றிப் பிதற்றும் பாடல்களும் நீக்கப்பெறுதல் வேண்டும். ஞானம் எய்திச் சீர்படாத நாட்களில், எளிதாகவும், விரைவாகவும் செல்வ நிலை எய்துவதற்கு அவர் புருடவேதியின் மீது

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/71&oldid=1250802" இலிருந்து மீள்விக்கப்பட்டது