பக்கம்:வேமனர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7. இயற்கையின் மெய்விளக்க அறிஞர்

“இயற்கையின் மெய்விளக்கத்துறை அறிஞர்களுள் ஒருவரும்,
மட்டுமதிப்பற்ற இயற்கையறிவுடன் கூடியவருமாகிய
ஒரு நாட்டுப்புறத்தார்."-ஹோரஸ்

ற்றுத்துறைபோய புலவராக இல்லாதபோதிலும் பிரஸ் தான திரயத்தைப்பற்றி[1] (மூன்று முக்கிய நூல்களைப்பற்றி) அறியாமையுடையவராக இருந்தபோதிலும், வேமனர் தன் சொந்த உரிமைப்படி ஒரு மெய்விளக்க அறிஞராகவே திகழ்ந்தார். இந்த இயலின் தலைப்பில் மேற்கோளாகக்காட்டிய ஹோரஸின் சொற்களில், 'இயற்கையின் மெய்விளக்கத்துறை அறிஞர்களுள் ஒருவர்' என்று அவரை நாம் வழங்கலாம். வாழ்க்கையைப் பற்றிய அவருடைய புதுப்பாங்குடைய உள்நோக்குகளும் மிகுந்த நுகர்வறிவுகளும் சமூக மெய்விளக்கம், நன்னெறி மெய்விளக்கம், சமய மெய்ஆற்றலளித்துள்ளன. இந்த மூன்றனுள் ஏதாவது ஒன்றைக்கூட ஓர் ஒழுங்கமைப்பாகச் செய்யவில்லை என்பது உண்மையே; எந்த ஓர் ஒழுங்கமைப்பில் முயன்றாலும் அவருடைய தனித்திறமை குழம்பிய பாங்கில் புரட்சி செய்தது; மனப்பான்மையும் வெடிக்கக்கூடிய நிலையில் இருந்தது. உண்மையில் தன்னுடைய அறிவிப்புகளிலேயே ஒன்றுக்கொன்று முரணாகவுள்ளவற்றையும் கூட அகற்றுவதில், முயற்சி எடுக்கவில்லை. அவற்றில் அவருடைய கவனம் ஈர்க்கப்பெற்றிருப்பின், அவரும் வால்ட் விட்மனேடு சேர்ந்து பின்வருமாறு கூறியிருந்திருப்பார்!

“நானே என்னை மறுத்துரைக்கின்றேனா?
மிகவும் நல்லது நானே மறுத்துரைக்கின்றேன்.
[நான் மிகப்பெரியவன், எண்ணிறந்த தன்மைகள் என்பாலுள்ளன.]


  1. மூன்று முக்கிய நூல்களாவன: உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள், பகவத்கீதை. இவை இந்திய மெய்விளக்கத் துறையின் மரபுப்படியமைந்த நூல்களாகும்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/73&oldid=1250808" இலிருந்து மீள்விக்கப்பட்டது