பக்கம்:வேமனர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமூகமெய்விளக்க அறிஞரான வேமனர் மனித சமத்துவ ஆதரிப்பாளராகத் திகழ்கின்றார். பல படிகளையும் இழிவுகளையும், குலமரபுச் சின்னங்களையும் விலக்குகளையும் கொண்ட சாதி அமைப்பினை ஒழித்துக்கட்டாதவரை சமத்துவ நிலை ஏற்படாது என்பதைத் தீவிரமாகவே நம்புகின்றார் அவர். பரந்த நிலையில் சாதி அமைப்பிற்கு எதிரான அவர் வாதங்கள் இவையாகும். சூத்திரர்களைப் போலவே பெண்களும் வேதங்களைப் பயில்வதைத் தவிர்க்கப்பெற்றால் அவர்கள் மதிப்பு நிலையும் சூத்திரர்களின் மதிப்பு நிலையைவிட அதிகம் உயராது. அப்படியிருக்கும்போது ஒரு பெண்ணின் மகன் அல்லது ஒரு பெண்ணின் கணவன் சூத்திரனேயன்றி வேறு எங்கனம் இருக்கமுடியும்? மேலும், ஒவ்வொருவரும் பிறப்பில் சூத்திரனே என்று சொல்லப்படுகின்றது. அப்படி இருக்கும்போது, பூணூல் சூட்டும் விழா ஒன்று எங்ஙனம் மதிப்பு நிலையை அளிக்கின்றது? உறுதியாகவே, முக்கியமாக இருக்க வேண்டியது ஒருவருடைய நடத்தையேயன்றிச் சாதி அன்று. ஒழுக்கக்கேடடைந்த மனிதன் உண்மையில் தீண்டத்தகாதவன் (மலம்). மேலும், உங்களைப் போலவே, ஒரே தசை, குருதியினின்று உங்கள் மலமும் ஆக்கப்பட்டதன்றோ? நான் உங்களை வேண்டுவதெல்லாம் தீண்டத்தகாதவரிடத்தில் உறையும் பரம்பொருளின் சாதி என்ன என்பது. நன்னெறியுடன் வாழும் தீண்டத்தகாதவர், இழிவானவராகவும் வழக்கமாகப் பொய்யுரைப்பவராகவும் உள்ள மிக உயர்ந்த சாதியைச் சார்ந்த ஒருவரைவிட உண்மையிலேயே பன்மடங்கு உயர்ந்தவராகின்றார். இப்படியிருக்க, ஒருவர் தன் உயர்ந்த சாதியைக் குறித்தோ, வேறு ஒருவரின் தாழ்ந்த சாதியைக் குறித்தோ ஏன் பெருமையடித்துக்கொள்ள வேண்டும்? எல்லோரும் இறைவனுடைய குழந்தைகளன்றோ? பிறப்பிலும் மீண்டும் இறப்பிலும் அவர்கள் யாவரும் ஒரே நிலையில்தானே உள்ளனர்? யாரொருவர் தன் சாதியைத் துறக்கின்றாரோ அவர்தான் இறைவனுக்குரியவராகின்றார்.

சாதியைத் தவிர, பொருளாதார அடிப்படையிலுள்ள வகுப்புவகையும் பிரிப்புச் சக்தியுடையது என்ற உண்மை வேமனர் அறியாததன்று. உண்மையிலேயே, சாதியைவிட வகுப்புவகையே மனிதர்கட்கிடையே மிகவும் அகன்ற இடைவெளியை உண்டாக்குகின்றது என்று நம்புகின்றார். எவ்வளவு தாழ்ந்த சாதியினராக இருந்தாலும், பணக்காரர் முதன்மையாகத் திகழ்கின்றார், அதற்கு நேர்மாறாக எவ்வளவு உயர்ந்த சாதியினராக இருந்தாலும் ஏழையாயிருப்பவர் ஊக்கம் குன்றிப்போகின்றார் என்கின்றார் வேமனர். முட்டாள்கள் தமது சாதி, கால்வழி, புலமை இவற்றைக் குறித்துத் தற்புகழ்ச்சியாகக் கூறிக்கொண்டாலும் உண்மையில்

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/74&oldid=1250810" இலிருந்து மீள்விக்கப்பட்டது