பக்கம்:வேமனர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவர்கள் பணக்காரர்களிடம் தன்மதிப்பற்ற அடிமைகளாகவே உள்ளனர் என்கின்றார் அவர். பணக்காரர் ஒருவரிடத்தில் அவர்கள் ஒவ்வொரு நற்குணத்தையும் கலைத்திற நிறைவையும் காண்கின்றனர்; அல்லது காண்கின்றதாகப் பாசாங்கு செய்கின்றனர். அழகில் மதனவேள் என்றும், பலத்தில் வீமன் என்றும் புகழ்மாலை சூட்டுகின்றனர். வேமனர் அத்தகைய கெஞ்சிநிற்கும் கயவர்களை இழிவாகக் கருதினாலும், செல்வத்தை இகழ்ந்து கூறினாரிலர். அவரைப்போன்ற ஏனைய பெரும்பான்மையான ஆசிரியர்களைப் போலன்றி செல்வத்தை விட வறுமையே அதிகமாகத் தூய்மையைக் கெடுக்கும், செல்வாக்கினையுடையது என்று கருதுகின்றார், ஈன்று புறந்தந்த அன்னைக்கும் அவள் செல்வ மக்களுக்கும் இடையிலும்கூடப் பணம் கசப்பினை விளைவிக்கும் மூலமுதலாக அமைகின்றது என்பது உண்மையே. பணம் மட்டிலும் மகிழ்ச்சியைத் தருவதில்லை என்று சிலர் நிலைநிறுத்துவதிலும் உண்மை உண்டு. இந்த இரண்டு உண்மைகளையும் ஒப்புக்கொள்கின்றோம்; பணம் இல்லாமல் எப்படி ஒருவர் காலம் தள்ளுவது?" என்கின்றார். ஒருவர் தாமாகவே வறுமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் அது முற்றிலும் வேறுபட்ட செய்தியாகும்; அப்பொழுது வறுமை அவரை உயர்த்துகின்றது. வேறு வழியேயின்றி ஒருவர் ஏழையாக இருக்க நேர்ந்தால் அவர் உடல்சார்ந்த நிலையிலும் ஒழுக்கம் சார்ந்த நிலையிலும் மோசமாகத் தொடங்குகின்றார். "ஏழையொருவர் நேர்மையாகவோ, துணிவாகவோ இருத்தல் முடியாது. அவர் தனது துணைவி, மக்கள் இவர்களுடைய நன்மதிப்பைப் பேணுவதும் அரிது; தன்னுடைய சுயமதிப்பைப் பேணமுடியாத நிலையோ மேலும் கேடானதாகும்" என்று கருதுகின்றார் வேமனர். மேலும் வேமனர் பார்வையில் தனது குடும்பத்திற்குச் சில இன்ப வாய்ப்புகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இயலாத ஒருவர் இரங்கத்தக்கவர் அல்ல; அவர் வெறுக்கத்தக்கவராகின்றார். "வறுமை என்பது ஒரு காட்டுத் தீ. அது உங்களை அழிக்கின்றது; உங்கள் அன்புக்குரிய எல்லோரையும் அழிக்கின்றது. உண்மையில், வறுமை என்பது பழிகேடாகும்' என்று எச்சரிக்கின்றார் அவர். வறுமையைக் குறித்து அவரது பேரச்சம் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் பேரச்சத்திற்குச் சரிசமமாகின்றது. ஷா சொன்னார்: "கேடுகளில் மிகப்பெரியதும் பழிச்செயல்களில் மிகக்கொடுமையாக இருப்பதும் வறுமையாகும்.’’

ஆனால், ஷாவைப்போலன்றி, வேமனர் வறுமைக்குச் சமூக அடிப்படையில் ஒரு கழுவாயைச் சிந்திக்க முடியவில்லை. முன்னோக்கி அறியத்தக்க ஆற்றல் எவ்வளவு இருந்தபோதிலும் இடைக் காலத்தைச் சார்ந்த ஒருவரிடம் இத்தகைய ஒன்றை எதிர்பார்க்க முடியாது. வறுமையின் மூலகாரணத்தை ஆய்ந்தறிய முடியாத

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/75&oldid=1250812" இலிருந்து மீள்விக்கப்பட்டது