பக்கம்:வேமனர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுருங்கக் கூறினால், இதுவே வேமனரின் சமூகமெய் விளக்கமாகும். அதன் உயிர்நிலைக்கூறுகளில் அஃது இடைக்கால இந்தியாவில் வாழ்ந்த பசவர், ஞானதேவர், நாமதேவர், துக்காராம், இராமாநந்தர், கபீர், தாதர், நானக், லால்தாசர், சைத்தன்யர் போன்ற மறைமெய்ம்மையாளர்களின் மெய்விளக்கத்துடன் கிட்டத்தட்ட ஒன்றிய நிலையாக அமைகின்றது. அவர்களுக்கிடையில் அவர்கள் ஒரு புரட்சியையே உண்டாக்கினார்கள். ஆனால் அதன் விளைவுகள் மேல்மட்டத்திலேயும் நிலையற்றதாகவுமாகவே இருந்தன. காரணம் என்ன? துர்ஜடி பிரசாத் முக்கர்ஜி என்பார் 'நவீன இந்தியப் பண்பாடு' என்ற தனது புதுப்பாங்குடைய ஒளிதுலங்கும் நூலில் சரியாகக் குறிப்பிட்டவாறு, "இந்திய சமூகப் பொருளாதாரத்தில் அடிப்படையான ஒரு மாற்றம் இல்லாததனால் மறை மெய்ம்மை சார்ந்த புரட்சி ஒரு கண்ணாடி-புரட்சியாகவே போய் விட்டது."

இனி வேமனரின் நன்னெறி விளக்கத்தின்மீது தம் கவனத்தைச் செலுத்தினால், அது இரண்டு நிலைகளில் இருப்பதைக்காண்கின்றோம். வேமனர் குறிக்கோள் நெறியாளராக இருந்தபோதிலும், மனித இயல்பின் வரம்பு எல்லைகளை அறியாதவரல்ல. ஒவ்வொருவரும் ஒரு யோகியாக இருக்க முடியாதென்பதை அறிந்தவராகவே இருந்தார்; தன்னை ஒரு யோகியாகச் செய்து கொள்ளாமலேயே யோகியின் வாழ்க்கையை மேற்கொண்டு முட்டாளாக அல்லது கயவகை மாறும் ஒருவனே விட நேர்மையும் நாணயமும் உள்ள குடும்பியே எல்லேயில்லாத அளவுக்கு நல்லவன் என்பதையும் அறிந்தவரே. ஆகவே, அவர் பொதுவாக எல்லோருக்கும் பொருந்தும்படியாக விதிகளடங்கிய தொகுதியொன்றினையும், திட சித்தத்துடனிருந்து ஒழுக்கமானதும் அபாயத்திற்கேதுவானது மான யோகியரின் நெறியைக் கடைப்பிடிக்கத் துணிவுகொண்ட வர்கட்காக மட்டிலும் பொருந்தும்படியாக விதிகளடங்கிய மற்றொரு தொகுதியினையும் அடைவுபடுத்திக் காட்டுகின்றார். அவர் இத்தகைய இருவேறுபட்ட மக்கட் கூட்டத்துடன் பேசியதன் காரகணமாகவே அவருடைய சிந்தனையில் தெளிவான முரண்பாடுகளின் சுவடுகளைக் காணமுடிகின்றது.

யோகியாவதற்குரிய சரக்கு (திண்மை) உடையவரை நோக்கி வேமனர் குடும்ப வாழ்க்கை சிக்க வைக்கும் பொறி என்றும், கண்ணி என்றும், இறக்கும்பொழுது அன்புடைய மனைவியோ அருமைக் குழவிகளோகூட வாரார் என்றும், பாலுறவு வாழ்க்கை அழுக்குடையதென்றும், மதிப்புக்குறைவுடையது என்றும், உலக செல்வங்கள் யாவும் விரைந்தழியக்கூடியவை என்றும், ஆகவே ஒருவர் ஒரேமனத்துடன் ஆன்ம உணர்வை நாடுவதில் எல்லாவற்

70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/77&oldid=1282626" இலிருந்து மீள்விக்கப்பட்டது