பக்கம்:வேமனர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8. உண்மையில் அரிய மேதை

“கற்றிடக் கற்றிடக்
கனிவினை நல்கிடும்
கவிதைகள் புனைதனித்
தகவுளார் அரியர்-ஆங்கு
உற்றிடும் சுவைதெரிந்
தற்புதக் கவிதையை
உளத்திலாய் திறமுளார்
செகத்தினில் அரியரே.

-போப்

வ்வொரு நோக்கிலும் வேமனர் ஒரு மேதை. உண்மையிலேயே அவர் ஓர் அரிய மேதை புகழ் பெறாத ஒரு சிற்றூரில், பிறந்து வளர்ந்த அவர் இந்த உலக முழுவதையும் தன் அறிவு எல்லைக்குள் எடுத்துக்கொண்டுவிட்டார். ஒழுக்கக் கேடான வாழ்க்கைக்குப் பிறகு, அவர் தன்னை உறுதியாகக் கட்டுப்படுத்திக் கொண்டு ஓர் ஞானியாகவே ஆகிவிட்டார். ஒழுங்கான கல்வியின்றிப் புதிய அழகுகளுடனும் ஆற்றலுடனும் கையாளும் அளவிற்குத் தன்னுடைய மொழியில் தேர்ச்சியடைந்துவிட்டார். எந்தவித இலக்கிய அவாவுமின்றி, தான் வாழ்ந்த காலத்திற்கு மட்டிலுமின்றி, எல்லாக் காலத்திற்குமே ஒரு சிறந்த கவிஞராக வளர்ந்து விட்டார். தன்னுடைய நாட்டிலோ அல்லது வேறு நாட்டிலோ உள்ள மெய்விளக்க நூல்களின் அறிமுகமின்றியே, பலவற்றை உட்கொண்டுள்ளதும், துணிவானதும், புதுமையானதும், சமயப் பற்றுக் கோட்பாட்டுக்குரியதுமான சிக்கலையெல்லாம் தன்னகத்தே கொண்ட மெய்விளக்கத் தத்துவத்தைப் போதித்தார். தனியாகவே நின்று வெவ்வேறான கொள்கை முன்னணிகளுடன் போர் தொடுத்த வண்ணமிருந்தார். உண்மையை நிலைநாட்டுவதற்காகவே அவர் பல சில உருக்களை உடைத்தெறிந்தார். மனிதனைத் தளைகளினின்றும் விடுவிப்பதற்காகவே நம்பிக்கையினைத் தகர்த்தெறிந்தார். இரண்டு கால்களின்மீதுள்ள ஒரு புயலாகத் திகழ்ந்து தனக்கு முன்னருள்ள ஒவ்வொன்றையும் துடைத்தழித்தார். ஆயினும் அவர் பலருடைய அன்புக்குரியவரானர் காரணம், அவர் தன்னுடைய கடுந்தன்மையைச் சொல் நயத்தால் பக்குவ

78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/85&oldid=1282632" இலிருந்து மீள்விக்கப்பட்டது