வர் நகல்களாகவோ எதிரொலிப்பவர்களாகவோ இலர்; சர்வக்ஞர் வேமனரைவிட உண்மைவாதியாகவும் உலக வழியில் ஞானம் மிக்கவராகவும் திகழ்ந்தார்; அவர்களிருவரும் சில அடிப்படைக் கருத்துகளையும் குறிக்கோள்களையும் வலியுறுத்துவதில் மாறுபட்டனர்.
நவீன வங்காளத்தில் கூர்த்த மதியினர்களுள் ஒருவரான பேராசிரியர் பினய் குமார் சர்க்கார் என்பார் தம்முடைய 'இந்து சமூக இயலின் உடன்பாட்டுப்பின்னணி' என்ற நூலில் சொல்லுவது:
- தமிழ்க் குறளில் நுவலப்படும் பக்தி, சமத்துவம் புரட்சியில் சென்றுமுடியும் அளவிற்கு வேமனரின் பாடல்களில் கொண்டு செலுத்தப்பெறுகின்றது. சாதி வேறுபாடுகள் உண்டுபண்ணும் ஏலா நிலைகளை எதிர்த்து அவர் குவிக்கும் வசைமாரிகளைவிடப் பொருளாதார நிலைகளினல் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைக் குறித்து அவர் கூறும் ஏளன உரைகள் அடிப்படையையே மாற்றியமைப்பதிலும் மெய்வாய்மை கெடாதிருப்பதிலும் சிறிதும் குறைந்தவை அல்ல...இந்து நேர் காட்சி வாதத்தில் அவர் பெற்றுள்ள இடம் சற்று உன்னத நிலையில் இல்லாது போயினும், அது கபீர், சைத்தன்யர், பிறர் பெற்றுள்ள அதே நிலையில் உள்ளது என்று கூறலாம்.
ஆயினும் திருவள்ளுவரையோ கபீரையோ அல்லது சைத்தன்யரையோ இவ்வுலகம் அறிந்திருக்கும் அளவுக்கு வேமனரை அறியவில்லை; அவர் குறைந்தே அறியப்பெற்றுள்ளார். தெலுங்கு இலக்கியத் தலைமைப் புலவர்கள் தம்மால் இயன்ற அளவு வேமனரை மறக்கும் அளவுக்குக் கண்டனம் செய்த திருப்பணியே எல்லோரும் இரங்கத்தக்க முதற் காரணமாகும். இறுதியில் அவர்கள் தோல்வியுற்றாலும், அஃது அத்தலைவர்கள் தளர்ச்சியடைந்ததாலன்று; ஆயினும் மேனட்டுப் புலவர்களாகிய டுடாய்ஸ், பிரெளன், மாக் டனுல்டு, கோவர், கேம்பெல், கிரியர்சன் ஆகியோர் அவர்களுடைய சதியைக் குறுக்கிட்டுக் கெடுத்ததே காரணமாகும். திருவள்ளுவருக்கு இராஜாஜி கிடைத்ததுபோலவும், கபீருக்கு இரவீந்திரநாத தாகூர் கிடைத்ததுபோலவும் வேமனருக்கு ஓர் ஒப்பற்ற மொழி பெயர்ப்பாளர் அமையாதது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். உலகினரின் நல்லெண்ணத்திற்குத் தக்கவாறு, பிரௌன் வேமனருக்கு முற்றிலும் உதவ முடியவில்லை. அவரோ ஒரு வெளி நாட்டுக்காரர், கிறித்தவர்; அவருடைய அயல்நாட்டுப் பின்னணி வண்ணத்தைக்கொண்டு வேமனருடைய கவிதையின் உயிரோட்டத்தை முற்றிலும் தொட முடியவில்லை அவருடைய மொழியின் மிகச் சிறு நுணுக்கங்களை அறிந்துகொள்ளவும் முடியவில்லை. எடுத்
83