பக்கம்:வேமனர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மிக்க ஆர்வங்கொண்டு நம்முடைய உலகினை இழிவாகக் கருதுவது முட்டாள்தனமானது என்று அவர் கழறியுரைக்கவில்லையா? நாம் நிற்கும் ஒவ்வொர் இடமும் திருநிலையான இடங்களனைத்திலும் மிகத் திருநிலையுடையது என்று அவர் வற்புறுத்திக் கூறவில்லையா? அவருடைய சமயம் மனித சமயமாகும்; அன்பை அடிப்படையாகக் கொண்ட அவருடைய வாழ்க்கைப் பணி மனிதர்களை நன்கு புரிந்துகொள்வதும் மனிதர்களிடையே நட்பை உண்டாக்குவதுமான பணியாகும்; இனமரபு அல்லது சமயம், சமயக்கிளை அல்லது வழிபாட்டு மரபு, வகுப்பு அல்லது சாதி இவற்றின் அடிப்படையில் வேறுபாடற்ற உலக சகோதரத்துவத்தை நிறுவுவதே அவருடைய குறிக்கோளாகும். இங்ஙணம் வேமனர் கடவுள்பற்றிய கருத்தற்றவரும் கடவுள் இல்லை என்று சாதிப்பவரும் உட்பட ஒவ்வொருவருக்கும் ஒரு தூதுச்செய்தியைக் கொண்டுள்ளார். "தன்னோடு சேர்ந்த மக்களின் துக்கங்களைத் தன்னுடையனவாகக் கருதுபவனே மனிதன் எனப்படுவதற்குத் தகுதியானவன்" என்ற அவருடைய விழுமிய கழற்றுரையில் அவருடைய தனிக்கோட்பாட்டின் சாரம் அடங்கியுள்ளது.

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/93&oldid=1254679" இலிருந்து மீள்விக்கப்பட்டது