பக்கம்:வேமனர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. பொங்கும் மதங்களைப் பின்பற்றும் மானிடர்
புவியினிற் பல்கோடி கோடியாய் உள்ளனர்;
துங்கார் அப்பெருஞ் சமயங்கள் நம்பிக்கை
தோன்றச் செயாவிடின் அவைநல்ல அல்லவே.

3. சாத்திரக் குப்பையைச் சாலப் படித்தவர்.
சார்ந்ததன் உண்மையைத் தேர்ந்ததிற் றோய்ந்தவர்;
மாத்திரைப் போதினில் எய்திப் பிறந்திடும்
மரணத்தின் உளவினைத்* தெரிகிலார்; ஐயகோ!
[*உளவு-மறை, இரகசியம்]

4. நெற்றியில் கைகளில் நீற்றினைப் பூசுவீர்!
நிகரற்ற லிங்கத்தை மார்பினிற் பூணுவீர்!
பற்றுடன் இவையுங்கள் 'ரொக்கம்' பெருக்கலாம்
பாவியீர்! உலகெலாம் பாழாகும் ஆகுமே!

5. சார்ந்திடேல் சார்ந்திடேல்; தூய்மையில் லாயெனச்
சற்றுகின் முற்சிலர்: ஏற்றமுள் ளாரெவர்?
மாந்தர்தம் மேனியின் தசைகளிற் பாபமே
மருவிடும்; உலகிலிக் கோட்டைக் கிழித்ததார்?

உருவ வணக்கம்:

6. கற்களை மட்டும்நீர் கனிவுடன் பற்றுவீர்!
கண்கண்ட* பரமனை நினைந்திடா மிருகம்நீர்!
பொற்புடன் உலகினில் பேசிடும் உயிரினும்
பொலிவிலாக் கற்களோ உயர்சிறப் பெய்திடும்?
[*கண்கண்ட பரமன்-நடமாடும் தெய்வம் (திருமூலர்)]

7. புலனற்ற படிவத்தில்* இறைவனுளன் என்று
பொய்யான கனவினை நீர்காண ஈர்க்கும்
நலனற்ற மாயை எது? கேட்டலொடு பார்த்தல்
நண்ணாத கற்கள்.அம் மாயைக் குவப்போ?
[*படிவம்-விக்கிரகம்]

8. மண்ணினை யெடுத்தினிய உருவம் சமைத்ததை
மாதேவன் என்றுவழி பாடுசெய் கின்றவர்;
உண்ணின்ற சோதியைக் கண்மூடி யாயிங்
கூர்தொறும் இகழ்ந்திடும் தீரமெங் குற்றனர்?

9.மலையினிற் கல்லைப் பெயர்த்தெடுக் கின்றவர்
மற்றதைக் கால்களாற் கைகளால் தட்டியாய்ந்
திலகுதல் உளியினுல் அழகுற வடித்தபின்
'இறைவனே! இறைவனே!' எனத்துதித் தாடுவார்

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/95&oldid=1257483" இலிருந்து மீள்விக்கப்பட்டது