பக்கம்:வேமனர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26. கரும்புற்ற நறுஞ்சாறும், சருக்கரையும் தேனும்
கமழ்கின்ற பலாக்கனியிற் பொலிகின்ற சுளையும்
விரும்புறுகொய் யாக்கனியும் நமைவிரும்பும் நண்பர்
விருப்பினொடு பகர்மொழிகட் கினையாகும் கொல்லோ?

தீய மனைவியர்:

வேறு

27. கணவனுக் கடங்காப் புல்லிய மனையாள்
காலனைப் பேயினை ஒப்பாள்
குணமிலா அப்பெண் பேயினைப் பிடித்துக்
குலுக்கிடும் தகுதிகொண் டவளாம்.

28. கடலினிற் செல்லும் கப்பலின் வழிபோல்
காற்றிற்செல் பறவையின் வழிபோல்
புடவையில் மடவார் நடையினை யாரும்
புந்தியிற் காணுவ தரிதே.

29. நவையிலா மனைவி வாய்த்திடின் அவனே
நற்செல்வன்; இலையெனின் அன்னோன்
புவியினில் பெயர்க்குக் கணவனும்; அவளோ
புருடனைப் பிணமென வெறுப்பாள்.

வேறு

30. நாதன் களிப்பே பெரிதென்னும்
நல்லாள் உலகிற் கணியாவாள்
வாதம் பேசும் தன்னலப்பெண்
மரணம் விடுத்த அம்பாவாள்.

31. அடங்கா தெதிர்க்கும் மங்கையர்கள்
அணங்கோ? இல்லை; கொடுவிலங்கே:
அடங்கா இவளோ டுறைவதினும்
அப்பா லேயில்வாழ் வது நன்றே.

இருபிறப்பாளர்:

வேறு

32.உற்றாரை உறவினரைச் சூத்திரரென் றெண்ணி
"உலகத்தில் நாங்களிரு பிறப்படைந்தோம்"-என்பர்
பற்றோடும்-"அது"-தம்மைப் புரக்குமென நினைப்பர்;
பாபம்செய் மனத்தினரே சூத்திரராம் ஐயா!

33. சண்டாள இதயத்தை நன்றாகப் பெற்றோர்
தாழ்வுற்ற பாபத்தை மேல்மேல் வளர்ப்போர்
கொண்டாடும் நல்லெண்ணம் இல்லா திருப்போர்
குற்றமில் இருபிறப் புற்றவர் ஆவரோ.

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/98&oldid=1256131" இலிருந்து மீள்விக்கப்பட்டது