பக்கம்:வேமனர்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



34. எவ்வளவோ சாத்திரங்கள் கற்றுணர்ந்தோம்; யாமே
இவ்வுலகில் தூயரெனச் செப்பிடுசெல் வரினும்
இவ்வுலகிற் பிறர்பொருளைச் சுரண்டாமல் மிக்க
ஏழ்மையினில் உழல்பவரே மேலாய மாந்தர்.

வேறு



35.தூய பூணுால் அணிவதனால்
சூத்திரத் தன்மை போமென்பர்:
தீய மரணம் வரும்போது
திரும்ப* அஃது வரல்என்னோ?
[* அஃது-குத்திரத்தன்மை!]

வேறு



36.காதலுறு மனையாளை வீட்டை நீத்துக்
கரும்பொன்னே யிடையினிலே சுற்றிக் கொண்டு
வேதனைசெய் கைப்பான மதுவை யுண்டு
மிருகம்போல் வாழ்வதனால் இன்பம் உண்டோ?
[இது, பைராகிகளே இகழ்ந்தது]

அறிஞரும் அல்லாதாரும்:



37. தாமதித்துப் புரிசெயல்கள் நிறைவே றவில்லை;
தரிப்பின்றிப் புரிசெயல்கள் உறுதியுறவில்லை;
மாமரத்தில் இளம்பிஞ்சை யறுத்துவிட்டால் அஃது
வண்ணமுறப் பழுத்திடுமோ? நண்ணுசுவை தருமோ?

38. தண்ணீரில் மிதக்கின்ற நாவாய்கள் நிலத்தில்
சாண்கூட ஓடாது; கூர்மதிபெற் றவனும்
நண்ணுத இடத்தினிலே அகப்பட்டுக் கொண்டால்
நலிவுறுவன், எளியவர்கள் வென்றிடுவர் அம்மா.

வேறு



39. நெடும்புனல் முதலே யானையை வெல்லும்
நிலத்தினில் அம்முத லையினை
அடும்மிகச் சிறிய சுணங்கனும்; இடமே
அவரவர்க் காற்றலேத் தருமால்.

வேறு



40. புலபுலெனக் கலகலெனப் பன்றிகளும் நாணப்
புத்திரர்கள் ஏழெட்டைப் பெற்றதனாற் பயனென்?
நலமளிக்கும் குஞ்சரம்போல் பெருமிதத்தோ டோங்கும்
நன்மகவொன் றீன்றிடினிவ் வுலகமெலாம் வாழும்.

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/99&oldid=1267353" இலிருந்து மீள்விக்கப்பட்டது