பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழைய வரலாறு

7


சண்டைகளும் மக்கள்பால் ஏற்பட்ட மனக்கசப்பும் அளவிறந்தனவாகும். உள்நாட்டு அரசர்கள் ஒருவரோடொருவர் மோதி மண்டையை உடைத்துக் கொள்வதற்கு மட்டும் தன் படைவலியைத் தாராளமாகத் தந்துதவிய வெள்ளை ஏகாதிபத்திய வர்க்கம் இந்த உள் காட்டுச் சீரழிவைப்போக்க ஒரு சிறிதும் கவலைகொள்ளவில்லை. அதற்கு நேர் மாறாக ‘இத்தனைக்கும் காரணம் ஆர்க்காட்டு நவாபுவின் ஆற்றலின்மையே. எனவே நாட்டில் அமைதி நிலவ நவாபுவின் அதிகாரத்தைப் பூசணமாகப் பறிமுதல் செய்யவேண்டும்’ என்று குரல் எழுப்பிப் போர்க்கோலம் பூண்டனர் வெள்ளைத் தளபதிகள். உமதத்-உல்-உமாராவுக்கு ஆசை காட்டியும் அச்சமூட்டியும் தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற எவ்வளவோ முயற்சிகளைச் செய்தனர் வெள்ளையர். ஆனால் அரியணையிலமர்ந்தபின் உமதுத்-உல்-உமாராவின் போக்கே மாறி விட்டது. எதற்கெடுத்தாலும் ‘முடியாது’ என்று நிமிர்ந்து பேசினான் ஆர்க்காட்டு நவாபு. பார்த்தனர் வெள்ளையர். உமதுத்-உல்-உமாராவை வழிக்குக்கொண்டு வருவது அல்லது அரியணையிலிருந்து வீழ்த்துவது என்ற முடிவிற்கு வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம். ஆம். முற்பகல் இன்னா செய்யின் பிற்பகல் தானே விளையும் என்பது பொய்யா மொழியன்றோ? தமிழ் நாட்டில் சுதந்தர ஆட்சி நடத்திய எத்தனை உள்நாட்டு அரசுகளை அழித்து ஒழித்துக் கட்டுவதில் ஆர்க்காட்டு நவாபுவான முகம்மதலியும் அவன் மகனுகிய இந்த உமதுத்-உல்-உமாராவும் இரவு பகலாய்ப் பாடுபட்டனர்? மற்றவர்களுக்கு