பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வேலூர்ப் புரட்சி


அதன் விளைவாகக் கர்நாடகம் நாடோடிகளின் உரிமையாயிற்று. தமிழக வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஆர்க்காட்டு நவாபின் அலங்காரத்திற்கு என்று முடிவு செய்யப்பட்டது. 'அந்தோ பழம்பெருந் தமிழகமே! இமயத்தின் சாரலிலும் குமரி முனையிலும் உன் புகழ் எதிரொலித்த காலம் போய், மேலைக் கடலலைகளும் கீழைக்கடலலைகளும் உன் விஞ்சுபுகழை விளம்பியகாலம் போய் நீ இப்படியா பரதேசிகளுக்கு அடிமைப்பட வேண்டும்?' என்று நூலோரும் மேலோரும் நினைந்து நினைந்து நெஞ்சம் புழுங்கும் காலம் தமிழகத்திற்கு நேர்ந்தது. நல்லோர் நெஞ்சம் புழுங்கினால் நாட்டில் அமைதி நிலவுமா?


two late Nawabs, Mohamed Ali and his son, with Tippu Sultan, the British Government determined to assume the entire possession and Government of the Carnatic, making a provision for the family of the Nawab. This was carried into effect by a treaty entered into. with, the grandson of Mahomed Ali on the 31st July 1801. On that happy day results were acheived by a single stroke of a pen which fifty seven years of war & twenty years of negotiation had failed to effect. —Caldwell's, History of Tinnevelly pp. 169–70.