பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வேலூர்ப் புரட்சி


திண்ணம். இவ்வாறு வேங்கடத்தை வட எல்லையாய், போளூரைத் தெற்கெல்லையாய், மைசூரை மேற்கெல்லையாய், பழவேற்காடு ஏரியை கிழக்கெல்லையாய்க் கொண்டிருந்த வட ஆர்க்காடு மாவட்டத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எண்ணற்ற பாளையக்காரர்கள் வாழ்ந்து வந்தார்கள். விஜயநகரப் பேரரசர் காலத்தில் இப் பாளையக்காரர்களின் பரம்பரை தோன்றியது. அந்நாள் தொட்டு சிற்சில சந்தர்ப்பங்களைத் தவிர பெரும்பாலும் குறுநில மன்னர்களாய் ஆட்சி செலுத்தி வந்த இப் பாளையக்காரர்கள் முகம்மதியர் ஆட்சிக் காலத்தில் தங்கள் முழு அதிகாரத்தையும் நாட்டு மக்களிடத்திலே காட்டத் தொடங்கினர். எவருக்கும் கைகட்டிக் கப்பம் செலுத்த மறுத்தனர். இப்படித் தனி அரசு நடத்திவந்த இப் பாளையக்காரர்களின் சுதந்திர உணர்ச்சி காலப்போக்கை ஒட்டி நாளுக்குநாள் வளர்ந்து வலுப் பெறலாயிற்று. ஆர்க்காட்டு நவாபுவின் காலத்தில் இவர் களுடைய விடுதலை வேட்கை எல்லைமீறிச் சென்றிருந்தது. இந்நிலையில்தான் கர்நாடகம் முழுவதையும் ஆர்க்காட்டு நவாபுவிடமிருந்து கைப்பற்றிய ஆங்கில அரசாங்கம் வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பாளையக்கார் அனைவரையும் கைகட்டிக் கப்பம் செலுத்தக் கட்டளையிட்டது. சுதந்தா உணர்ச்சி மேலிட்ட வட ஆர்க்காடு மாவட்டப் பாளையக்காரர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குக் கப்பம் செலுத்த மறுத்தனர்; விடுதலை முரசு கொட்டினர். ஆத்திரம் கொண்டது கும்பினி அரசாங்கம். வட ஆர்க்காடு மாவட்டத்தின் முதல்