பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

வேலூர்ப் புரட்சி


Stratton, Mr. Cockburn, Lieut-col. Dorley). இந்த மூவர் மூளையும் தமிழகத்தின் வட எல்லையில் எழுந்த சுதந்தரக் கிளர்ச்சியை ஒடுக்குவதில் தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்தன. பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிபணிய மாட்டோம் என்று போர்க்கோலம் பூண்டிருந்த பாளையக்காரர்களுக்கெல்லாம் காக்பர்ன் கடிதம் எழுதினான். ‘பணிந்து விடுங்கள்; இல்லையேல் வந்திருக்கும் பட்டாளம் உங்களைக் கொன்று குவிக்காது திரும்பாது’ என்று மிரட்டினான். முகாமிலிருந்து கொண்டு பாளையக்காரர்களின் முகத்தைப் பார்க்கத் துடியாய்க் துடித்துக்கொண்டிருந்த காக்பர்னின் ஆசையெல்லாம் மண்ணாயிற்று. வடஆர்க்காடு மாவட்டத்தைச்சார்ந்த பாளையக்காரர் எவரும் வெள்ளை அதிகாரி இருக்கும் திக்கைக்கூடக் திரும்பிப் பர்ர்க்கவில்லை. தங்களுக்குப் பதிலாக தங்கள் வழக்கறிஞர்களே மட்டும் அவர்கள் அனுப்பி வைக்கிருந்தனர். தன்னைப் பார்க்கவந்த வழக்கறிஞர்கலைப் பார்த்து ‘எங்கே உங்கள் ராஜாக்கள்' என்று உறுமினான் காக்பர்ன். ஒரு வழக்கறிஞர், ‘எங்கள் தலைவர் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றார்; விரத நாள் ஆதலால் வெளியே வரமாட்டார்’ என்றார். இன்னுமொருவர் ‘எங்கள் அரசர் இன்றுதான் விளக்கெண்ணெய் குடிக்கிருக்கிறார், அவர் விரும்பினாலும் வந்து பார்ப்பது முடியாத காரியம் என்றார்’, மற்றொருவர் ‘நெடுநாளைக்குப் பின் இன்றுதான் எங்கள் ராஜா காட்டுக்கு வேட்டையாடப் புறப்பட்டிருக்கின்றார்’ என்றார், வக்கீல்களின் பதிலைக்கேட்ட காக்பர்ன் வயிறு