பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. வேலுரரின் விழுப்புகழ்

ண்டு தொண்டை நாட்டை ஆண்ட குறும்பர்கள் தங்கள் ஆட்சிக்குரிய பகுதியை இருபத்துநான்கு கோட்டங்களாகப் பிரித்து அரசோச்சினர் என்பர். அப் பிரிவினை அவர்களுக்குப்பின் தமிழகத்தின் வடபகுதியை ஆண்ட பல்லவர்களாலும் பிற்காலச் சோழர்களாலும் பின்பற்றப்பட்டு வந்தது. புழல்கோட்டம், ஈக்காட்டுக் கோட்டம், மணவிற்கோட்டம், செங்காட்டுக் கோட்டம், பையூர்க் கோட்டம், எயில் கோட்டம், தாமல் கோட்டம், ஊற்றுக்காட்டுக் கோட்டம், களத்தார்க்கோட்டம், செம்பூர்க்கோட்டம், ஆம்பூர்க் கோட்டம்,வெண்குன்றக் கோட்டம், பல்குன்றக் கோட்டம், இலங்காட்டுக் கோட்டம், கலியூர்க்கோட்டம், செங்கரை கோட்டம், படுவூர்க் கோட்டம், கடிகர்க் கோட்டம், செந்திருக்கைக் கோட்டம், குன்ற வட்டான கோட்டம், வேங்கடக் கோட்டம், வேலூர்க் கோட்டம், சேத்தார்க் கோட்டம், புலியூர்க் கோட்டம் என்பனவே அவ்விருபத்து நான்கு கோட்டங்களாகும்.4

சங்க காலத்துத் தமிழகத்தை அரசோச்சிய ஈரமும் வீரமும் ஒருசேரப் பொருந்திய வேந்தர்களுள் ஒருவன் ஓய்மா காட்டு நல்லியக் கோடன். கடையெழு வள்ளல்களுக்குப்பின் அவர்கள் புகழை எல்லாம் தன் புகழாகக் கொண்டு வாழ்ந்த இம்மன்னனே பத்துப் பாட்டுள் மூன்றுவது பாட்டாகிய சிறுபாணாற்றுப்படை போற்றும தலைவன். இவன் நாடு ஒய்மா நாடு என்பது இவன்


4. பார்க்க: சேக்கிழார்-டாக்டர். மா. இராசமாணிக்கம் பக்: 7