பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வேலூர்ப் புரட்சி


இன்றைய தென்ஆர்க்காடு மாவட்டத்தின் பெரும்பகுதியையும் வடஆர்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியையும் தன்னகத்தே கொண்டு விளங்கியது என்பது ஆராய்ச்சியால் புலனாகும் உண்மையாகும்.7 புறநானூற்றிலும், சிறுபாணாற்றுப் படையிலும் பெரிதும் போற்றப்படும் நல்லியக் கோடனுடைய ஊர்களுள் பெருமை பொருந்தியனவாக ஐந்து ஊர்கள் குறிப்பிடப் பெறுகின்றன. அவை கிடங்கில், மாவிலங்கை, எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் என்பனவாம். இவ்வைந்துள்ளும் அரண்வலி சான்ற கோட்டையாய்ப்-புலவர் பலரை ஈன்றெடுத்த அருமை சான்ற ஊராய்-சங்க காலத்தில் திகழ்ந்த கிடங்கில் இப்பொழுது திண்டிவனத்தருகே ஒரு சிதைந்த சிற்றரசாய்க் காட்சி அளிக்கின்றது.8 நல்லியக்கோடனின்


7. இன்று வடஆர்க்காட்டில் உள்ள வேலூர் ஆரம்பத்தில் தென்னர்க்காடு மாவட்டத்தில்தான் இருந்தது என்பதை விளக்கும் அடிக்குறிப்பை முன் இயலில் காணலாம். அவ்வடிக் குறிப்பால் தெளிவாகும் செய்தி ஈண்டும் நினைவு. கூரத்தக்கது.

8. (i) இவனுடையதாகச் சொல்லப்பட்ட கிடங்கிலென்னும் ஊர் இப்பொழுது கிண்டிவனத்தைச் சார்ந்துள்ளது; கிடங்காலெனவும் வழங்கும். திண்டிவனத்திலுள்ள திண்டீசுவா மென்னும் சிவபெருமான் திருக்கோயில் இக்கிடங்கிலிருந்தாக சாசனங்களால் தெரியவருதலின் இப்பொழுது திண்டிவனமென்று வழங்கும் பெரிய ஊரும் அதனைச் சார்ந்த இடங்களும் சேர்ந்த பெரியதொரு நகரமாகக் கிடங்கில் இருந்திருக்க வேண்டுமென்று தோற்றுகின்றது. இவ்வூர், காவிதிக்