பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலூரின் விழுப்புகழ்

23


தலைநகர் எனக் கருதப்படும் மாவிலங்கை புனல் காட்டுக்கு வடக்குள்ள அருவாநாடு, அருவா வடதலைநாடு என்ற இரண்டும் சேர்ந்த இடமென்று கூறுவர்.9 ஆழ்ந்த அகழியும் இங்கி உயர்ந்த மதிலும் கொண்டு விளங்கிய இம்மாவிலங்கை தென் ஆர்க்காடு மாவட்டத்


கீரங் கண்ணார், காவிதிப் பெருங்கொற்றனார், குலபதி நக்கண்ணனாரென்னும் மூன்று நல்லிசைப் புலவர்களுக்குரிய இடமாகத் தெரிகின்றது. யாப்பருங்கல விருத்தியின் மேற்கோளாகிய, ‘கிடங்கிற் கிடங்கில்’ என்னும் வெண்பாவில் வந்துள்ள கிடங்கிலென்னுமூர் இதுவே. அதிற் சிதைந்த அகழியும் இடிந்த கோட்டையும் இன்றும் காணப்படுகின்றன.’ -பத்துப்பாட்டு, உ. வே. சா. பதிப்பு. பாடப்பட்டோர் வரலாறு, பக்கம் - lii

(ii) அகழி சூழ்ந்த கோட்டையைக் கிடங்கில் என்றும் கூறுவதுண்டு. முன்னாளில் கிடங்கில் என்னும் பெயருடைய கோட்டையின் தலைவனாகவும், கொடை வள்ளலாகவும் விளங்கிய நல்லியக்கோடன் என்ற சிற்றாரசனது பெருமையைச் சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. அவன் காலத்தில் அவ்வூர் கோட்டை மதில்களாலும், அகழிகளாலும் நன்முக அரண் செய்யப்பட்டிருந்தது. இன்றும் அங்குக் காணப்படும் சிதைந்த சுவர்களும், துர்ந்த கிடங்குகளும் அதன் பழம் பெருமையை அறிவிக்கின்றன. கிடங்கால் என்னும் பெயர்கொண்டு வழங்கும் அவ்வூருக்கு அண்மையில் திண்டிவனம் இப்பொழுது சிறந்து திகழ்கின்றது.-ஊரும் பேரும், பக்கம் - 79.

9. பார்க்க : புத்துப்பாட்டு, டாக்டர் உ. வே. சா. பதிப்பு, பாடப்பட்டோர் வரலாறு, பக்கம், lii