பக்கம்:வேலூர்ப்புரட்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தின் தெற்கெல்லையில் நடைபெற்ற பாளையக்காரர் சுதந்தரப் போர் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைத் தொகுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன். அதுபோது எதிர்பாராத வகையில் யான் கண்டெடுத்த சரித்திரப் புதையலே வேலூர்ப் புரட்சி’.

வேலூர்ப் புரட்சி பற்றிய விபரங்களே யான் படிக்கப் படிக்க என் உள்ளத்தில் பொங்கி எழுந்த உணர்ச்சிகள் பல. அவற்றுள் முக்கியமானது ‘இத்தகைய பெருமை சான்ற வரலாற்றை விளக்கமாக அறிந்துகொள்ள இத்தனை நாளும் தமிழகம் முயலவில்லேயே’ என்ற வருத்தம்தான். என் மனத்தில் தோன்றிய அவ்வருத்தம் தமிழினம் அறிந்து பெருமை கொள்ளத்தக்க இச்சீரிய வரலாற்றைப் பாரி நிலையத்தார் அன்புடன் வெளியிடுவதன் மூலம் ஒருவாறு நீங்குகிறது. அவர்கள் ஆதரவுக்கு என் உளங்கெழுமிய நன்றி.

இந்திய விடுதலைக்காக நடைபெற்ற முதல் சுதந்தரப் போர் என்று இந்நாள்வரை பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களால் தவறாகக் கருதப்பட்டுவரும் சிப்பாய்ப் புரட்சி நடைபெறுவதற்கு ஐம்பது ஆண்டுகட்கு முன்பே தமிழகத்தின் வட எல்லையில் நடைபெற்ற முதல் இந்திய ராணுவப் புரட்சியின் ஆராய்ச்சியாக அமைந்துள்ள இவ்வாலாற்று நூல் தமிழ் மக்கட்கு மிக்க மகிழ்வூட்டுமென்று நம்புகிறேன்.

இந்நூலின் கையெழுத்தப்படியைப் பார்த்துத் தக்க திருத்தங்கள் செய்துதவிய சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் விரிவுரையாளர் உயர்திரு. வித்துவான். பு. ரா. புருஷோத்தம நாயுடு அவர்கட்கு என் நன்றி நிறைந்த வணக்கங்கள் உரியன.

வாழ்க சுதந்தரம் !

வெல்க தமிழினம் !

ந. சஞ்சீவி
சென்னை - 28
மன்மத-தை-கஎ