பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் را برای நட்சத்திரம் திடுக்கிட்டெழுந்து, இங்கேயேதான்; என் பக்கத்திலேயே தான்" என்று அவரைத் தாங்கிப் பிடித்தாள். "ஆஹா, தன்யனானேன்! இனி எனக்கு இன்னொரு ஜன்மம் வேண்டியதில்லை; வேண்டியதே யில்லை - இதுவே ஏழாவது ஜன்மமாயிருந்து விட்டுப் போகட்டும், ஏழுமலையானே!" என்று வேண்டிக் கொண்டார் பத்மநாபன் அந்தச் சமயத்தில் முன்னாலும் பின்னாலும் பார்த்துக் கொண்டு, எதையோ வேஷ்டியில் மறைத்து மறைத்து எடுத்துக்கொண்டு, ஒதுங்கி ஒதுங்கி உள்ளே வந்தான் பீதாம்பரம். "என்னடா, அது?" என்று அதட்டினார் படாதிபதி. "அதாங்க, அம்மா ரொம்பக் களைப்பாயிருக் காங்களேன்னு. " 'ஒ, அதுவா? - என்ன இருந்தாலும் நீ புத்திசாலிடா சோடா கலந்தாயா?" என்று வாயெல்லாம் பல்லாகக் கேட்டார் படாதிபதி பத்மநாபன், அதற்குள், "வேண்டாம் சோடா, எனக்கு 'ரா'வாவே குடித்துத்தான் பழக்கம்!” என்றாள் நட்சத்திரம் குறுக்கிட்டு.