பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 707 "என் பிளாக் - மார்க்கெட் பணமே, இன்று நான் ஸ்பென்ஸருக்குப் போக வேண்டுமென்று இருந்தேன் அதனால்தான் ” "எதற்கு என் ஒயினே, இந்த அடிமையிடம் சொல்லக் கூடாதா?" "வேறொன்றுமில்லை, ஸ்பான்ஜ் ஒன்று வாங்க வேண்டும்..." 'இவ்வளவுதானே? என்னிடம் நாவசைத்தால் போதாதா?” "அசைக்கலாம் என்றுதான் இருந்தேன். நாளைக் காலையிலேயே அது வேண்டியிருந்ததால் தாமதம் ஆகுமோ என்று பயந்தேன்' "நான் இருக்கப் பயம் ஏது? - ஒரு வார்த்தை சொன்னால் பொழுது விடிவதற்கு முன்னாலேயே கையில் ஸ்பான்ஜ்ஜுடன் வந்து பாத் ரூம் கதவை நான் தட்ட மாட்டேனா? - இன்றிரவு மட்டும் அன்று நான் சொன்னேனே..." "அந்த அரோகரா பாங்க் ஸ்ெக்டரி அனந்தசயனம் அய்யங்கார் இருக்கானே, அவன் சதா உன் ஞாபகமாகவே இருக்கான் அதற்காக ஒவர் டிராப்ட்