பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 வேலை நிறுத்தம் ஏன்? மேலே இருந்த நம்பிக்கையையெல்லாம் விட்டுவிட்டு, பஞ்சகச்சத்தை இறுக்கியிறுக்கிக் கட்டிக்கொண்டு எடுப்பான் ஒட்டம்!" "ஹ ஹ ஹி ஹ் ஹீ ஹரீ - உங்களுக்கு மட்டும் வயது பதினாறோ? - வாருங்கள், இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து நான் ஷலிட்டிங்கை முடித்து விட்டுப் போகிறேன்!” "வேண்டாம் நீ போய் ரெஸ்ட் எடுத்துக் கொள்; நான் ஷஅட்டிங்கை கான்ஸல் செய்துவிடுகிறேன்!” இந்தச் சமயத்தில் நிசிலிலாவுக்கு ஏதோ ஆக்ஸிடெண்ட்' என்று கேள்விப்பட்ட ஜாலிவுட் ப்ரொட்யூஸர்களில் சிலர் அங்கே ஒடோடியும் வந்து, "என்ன லீலா, என்ன நடந்தது?" என்று அவளைச் சூழ்ந்து கொண்டு, அங்கம் அங்கமாகத் தொட்டுப் பார்த்தார்கள். 'ஒன்றுமில்லை; டாக்டர் ட்ரீட்மெண்ட்'டுக்கு அப்புறம் எல்லாம் சரியாப் போச்சு!" என்று மழுப்பிக் கொண்டே அவர்களுடைய அனுதாபத்திலிருந்து தப்ப நட்சத்திரம் விலகி விலகி நின்றாள். அடிபட்டவன் லைட் பாயா யிருந்தால் அது விஷயம் வேறே! நட்சத்திரத்தின் விஷயத்தில் அப்படி இருந்துவிட முடியுமா?