பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

703 வேலை நிறுத்தம் ஏன்? ஓ.கே. தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடுவானா? எடுக்கும்போதே எண்பது மைல் வேகத்தில் சென்றான்! அவனுடன் மற்றப் படாதிபதிகளின் கார்களும் போட்டியிடவே, பாதசாரிகள் 'செத் தோமா, பிழைத்தோமா' என்று தெரியாமல் கலகலத்துச் சிதறினர். இந்தக் காட்சி படாதிபதிகளுக்குப் பலே தமாஷாயிருந்தது - இருக்கத்தானே இருக்கும்? - காட்சி ஆரம்பிக்க இரண்டு மணி நேரம் இருக்குமுன்பே கையில் நாலரையனாவுடன் கெளண்ட்டருக்கருகே கியூ'வில் நிற்பர்களல்லவா அவர்கள்! ஐந்தாம் அத்தியாயம் பாக்கியசாலி பத்மனாபன்! "த்ரி நாட் நைன் ஒன்!" "நாட் போர் எய்ட் எலிக்ஸ்!" "ஸிக்ஸ்ட்டி ஸிக்ஸ் நைன்ட்டி நைன்!" "டு ஒன் பைவ் பைவ்!" "லெவன் நாட் லெவன் நாட்!"