பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஒட்டு மொத்த சமுதாயமே மனித குல அமைப்பு. இதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும். மனிதகுலம் முழுமைக்கும் ஒரு கல்வழியைத் தேடி ஆப்ங்து முடிவாக அறிவித்தவர், மனித குலத்தின் ஆற்றல் மிக்க சிந்தனையாளர் காரல் மார்க்ஸ். சிறு சிறு குழுக்களின், சிறு சிறு நாடுகளின் வளர்ச்சியிலும், தனிமனிதனின் உழைப்பிலும் வளர்ச்சியிலும் முழுமையான சிந்தனை செய்து முடிவுகண்டு முதலில் உரைத்தவர் அறிஞர் கார்ல் மார்க்ஸ்! உழைக்க வேண்டும்; பல ன் காண வேண்டும்; அதில் தடையோ, ஏமாற்றுதலோ, வஞ்சித்தலோ சுரண்டுதலோ, வேறு எதுவுமே தோன்றக் கூடாது. தோன்றினால் அதைத் துரத்த வேண்டும்; அழிக்க வேண்டும். மனித மனம் பலவிதப் பாய்ச்சல்களைக் கொண்டதாகும். சிங்திக்கும் ஆற்றல் மிகப் பெரிய வலுவுடையதாகும் எப்படி, எப்பொழுது, என்னென்ன வழிகளில் சிந்தனைப் போக்குகள் மாறும், செயல்படும் என்பதை எளிதில் அறிய இயலாது; கூற இயலாது. கொடிதோறும் வளர்ந்து நீளும் பெரும் வீச்சுடையது மனித மனம். நம் மனித மனம் காட்டாறா? சுழற்காற்றா? புயற்காற்றா? ஆழிச் சீற்றமா? அடைமழையா? சிறு துறலா? பனியா, பனிப்பொழிவா? இளங்காலைப் பொழுதா? பகல்வெயிற் பொழுதா? மயக்கும் மாலையா? மருட்டும் இரவா? இவை எல்லாமா?