பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 775 "அது சரி, எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை' என்று என்னிடம் மட்டும் எத்தனை தடவை வேண்டுமானாலும் சொல்லு ப்ரொட்யூஸர்களிடம் அப்படிச் சொல்லி விடாதே!" "சரி, நீ போ! - நான் குளித்துவிட்டு வருகிறேன்." 'இன்ஸ்பெக்டரிடம் என்ன சொல்ல?" 'எனக்குப் பிறந்த நாள் என்று சொல்லித் தொலையேம்மா!" 'நல்ல யோசனைதாண்டி, நான் வரேன்' குஞ்சம்மாள் திரும்பி இரண்டடிகள்தான் எடுத்து வைத்திருப்பாள் - அதற்குள் ஏதோ நினைத்துக் கொண்ட லீலா, "அம்மாம்மா, இன்னொரு விஷயம்." என்று இழுத்தாள். "என்ன?" என்று கேட்டுக் கொண்டே அவளுக்கு எதிரே வந்து நின்றாள் குஞ்சம்மாள். 'அவர்களிடம் நான் குளித்துக் கொண்டு இருப்பதாக மறந்து கூடச் சொல்லி விடாதேம்மா, எல்லாருமாகச் சேர்ந்து என் உடம்பைத் தேய்த்து விட இங்கேயே வந்துவிட்டாலும் வந்து விடுவார்கள்!"