பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 777 "நான் அதைச் சொல்லவில்லை ஐயா, நேற்றுக் கோலாகலா ஸ்டுடியோவில் நம் லீலாவின் ஜாக்கெட்டை அவர்தான் கழற்றினாராம்!" "எவர்?" "மிஸ்டர் பத்மநாபன்தான்!" "இருக்காது; ஒரு நாளும் இருக்காது!" என்று அடித்துச் சொன்னார் அவர் 'இருந்தால்?" என்று விறைப்புடன் நிமிர்ந்து நின்றார் இவர். "என் காதை அறுத்துக்கொள்கிறேன்!” என்று அவர் சூள் கொட்டினார். "வேண்டாம்; ஏற்கெனவே உமக்கு ஒரு காது செவிடு!" என்று இவர் எச்சரித்தார். 'அதனாலென்ன, என் லீலாவைப் பற்றி யார் என்ன சொன்னாலும் என் காதில் விழாமலிருப்பது நல்லதுதானே?" என்றார் அவர் ஆனந்த பரவசத்தோடு அதற்குள் மற்றொருவர் ஒடி வந்து, "என்ன விஷயம், என் இந்த ரகளை?" என்று அவர்களைக் கவலையுடன் விசாரித்தார்.