பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 723 "என்ன, உளறுகிறாய்?" என்று பத்மனாபன் உறுமினார். 'ஒன்றுமில்லை!" என்று ஓ.கே. பல்லை இளித்தான் இந்தச் சமயத்தில் இதோ வந்துவிட்டேன், இதோ வந்து விட்டேன்!" என்று மறுபடியும் ஊளையிட்டுக் கொண்டே ஓடிவந்தாள் குஞ்சம்மாள். "நிஜமாகவே வந்து விட்டாயா?" என்று வயிற் றெரிச்சலுடன் கேட்டார் பத்மநாபன் "ஆமாம், ஆமாம் - வாருங்கள், எல்லோரும் வாருங்கள் உட்காருங்கள், எல்லோரும் உட்காருங்கள்! என்று ஹாலில் போடப்பட்டிருந்த ஸோபாக்களைக் காட்டினாள் அவள். இந்த வரவேற்பு' பத்மநாபனுக்குப் பிடிக்க வில்லை. ஏனெனில், மற்றவர்களைப் போல அவர் நிசிலிலாவுக்கு எப்போதாவது ஏதாவது கொண்டுவந்து கொடுப்பவரல்ல அந்த வீட்டின் தினசரித் தேவைகள் அத்தனையையும்;பூர்த்தி செய்து கொண்டிருப்பவர் - அதற்காகவே தாம் ஜன்மம் எடுத்திருப்பதாக நாளது வரை எண்ணிக் கொண்டிருப்பவர்! அப்படிப் பட்டவருக்கு அந்த வீட்டில் தனியிடம் கிடைக்க வில்லையென்றால் ஆத்திரமாயிராதா? - அதிலும்,